ஆப்பிள் பிடிக்காத மனிதர் இவ்வுலகில் உண்டா? சீசனை பொறுத்து விதவிதமான ஆப்பிள், மார்க்கெட்டில் வருவது வழக்கம். நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப ரக ரகமான ஆப்பிள்களும் மார்க்கெட்டில் கிடைக்கும். எனினும், தரமான ஆப்பிள்களை தான் நாம் வாங்குகிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
இதனால் சிறந்த ஆப்பிள்களை பார்த்து வாங்குவது பலருக்கும் சிரமம். பெரும்பாலும், ஆப்பிள்கள் வெளியில் பார்ப்பதற்கு சிறந்த தோற்றம் கொண்டிருக்கும். ஆனால், வீட்டில் சென்று வெட்டி பார்த்தால் தான் அதன் உண்மையான தரம் வெளிப்படும். இதன் காரணமாக தான், ஒரு சிலர் தரமற்ற ஆப்பிளை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்த மாதிரியான சூழலில், மார்க்கெட்டில் விற்கும் ஆப்பிள்களில் எவை இனிப்பானது, சிறந்தது என்பதனை பார்த்து வாங்கும் பக்குவம் நமக்கு தேவை. ஆப்பிளின் எடை, ஆப்பிளின் நிறம், ஆப்பிளின் தரம் போன்றவை குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.
எடை அதிகம் கொண்ட ஆப்பிள்களை வாங்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலும் எடை அதிகம் கொண்ட ஆப்பிள்கள், உட்புறத்தில் மோசமாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆப்பிளின் எடை என்பது அதன் அளவை பொறுத்தும் அமைகிறது. ஒருவேளை ஆப்பிளின் எடை அதிகமெனில், நீங்கள் அதனை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. அதனால், மார்க்கெட்டுக்கு செல்லும்போது, லேசான, நடுத்தர அளவிலான ஆப்பிள்களை வாங்குவது சிறந்தது.
மார்க்கெட்டில் ராயல் ஆப்பிள், ஊட்டி ஆப்பிள், சுவையான சிகப்பு ஆப்பிள் என விதவிதமான ஆப்பிள்கள் கிடைக்கிறது. இவை அனைத்தின் தரம், விலை, பலன்கள் ஆகியவை வேறுபட்டும் காணப்படுகிறது. அதனால் தான் ஆப்பிள் வாங்கும்போது, அதன் தரம் குறித்தும் கூடுதல் கவனம் நமக்கு தேவை. இல்லையேல், தரமற்ற ஆப்பிளை அதிக விலை வைத்து விற்று நம்மை ஏமாற்றிவிடுவார்கள். பெரும்பாலும் ரெட் சோனா ஆப்பிளை வாங்குவது நல்லது.
சிறந்த ஆப்பிள்களை வாங்க வேண்டுமெனில், அதன் நிறம் குறித்தும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், சிறந்த, இனிப்பான ஆப்பிள்கள் எப்போதுமே முழுமையான சிகப்பு நிறத்தில் இருப்பதுமில்லை. அவை வெளிர் சிகப்பு மற்றும் பச்சை நிறத்தை கொண்டிருக்கும். பச்சை நிற ஆப்பிள்களை வாங்கும்போதும், முழுமையாக பச்சை நிறத்தில் இருப்பதனை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை காயாக, உவர்ப்பு தன்மை உடையதாக இருக்கலாம்.
ஆப்பிளின் வாசனை கொண்டு இதனை நாம் அறியலாம். ஏனெனில், ஆப்பிள்கள் வெவ்வேறு சுவை கொண்டவை. அதன் வாசனை கொண்டு ஃபிரெஷ்ஷான, இனிப்பான ஆப்பிளை நம்மால் வாங்க முடியும். ஒருவேளை ஆப்பிளின் வாசனை கொண்டு உங்களால் உணரமுடியவில்லை எனில், அழுத்தி பார்த்து வாங்கலாம். ஏனெனில், இனிப்பான ஆப்பிள் சாறு உடையதாக இருக்கும். (முகம் பளபளக்க ஆப்பிளை கொண்டு பேஷியல் செய்யலாம்)
இந்த பதிவின் மூலமாக ஆப்பிள்களை எப்படி தரம், நிறம், எடை பார்த்து வாங்குவது என்பதனை அறிந்திருப்பீர்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]