குளிர்காலம் வந்துவிட்டால், மார்க்கெட்டில் அதிக அளவு முள்ளங்கி கிடைக்கும். ஃபிரஷான முள்ளங்கியை சாம்பார், சாலட், ஊறுகாய், பச்சடி போன்ற பல வகையான உணவுகளில் பயன்படுத்துகிறோம். இவை சுவை மிகுந்த ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும்.
முள்ளங்கி ஃபிரஷாக இருந்தால் மட்டுமே அது ருசியாக இருக்கும். சில நேரங்களில் கசப்பான முள்ளங்கி நம் உணவின் சுவையைக் கெடுத்துவிடும். அதனால் தான் முள்ளங்கியை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். நல்ல முள்ளங்கியைத் தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருந்தாலும், சில விஷயங்களைக் கவனத்தில் வைத்துக் கொண்டால், தரமற்ற முள்ளங்கி வாங்குவதைத் தவிர்க்கலாம். நாம் முள்ளங்கி வாங்கும்போது அதன் எடை, நிறம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதை பற்றி விரிவாகப் பதிவில் பார்க்கலாம்.
முள்ளங்கியை வாங்கும் முன் நாம் அதன் இலைகளை சரிபார்க்க வேண்டும். அதன் இலைகள் புதியதாகவும், பச்சை நிறமாகவும் இருந்தால், அந்த முள்ளங்கி ஃபிரஷானது என்று அர்த்தம். ஏனெனில் அதன் இலைகள் சில நாட்களுக்குப் பிறகு மஞ்சள் நிறமாக மாறிவிடும். முள்ளங்கி இலைகளின் நிறத்தை வைத்துக் கண்டறிய முடியாவிட்டால், அதன் வாசனையை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பிரெஷ்ஷான கேரட்டை வாங்க சூப்பர் டிப்ஸ்!!!
கடினமாக இருக்கும் முள்ளங்கி சுவையாக இருக்கும். மென்மையாக இருக்கும் முள்ளங்கி சுவையாக இருக்காது, மற்றும் அவை சரியாக வேகாது என்றும் கூறப்படுகிறது. எனவே கடினமாக இருக்கும் முள்ளங்கியை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது, அதே சமயம் முள்ளங்கி காய்ந்ததாகவும் இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் முள்ளங்கியை உடைத்து, அது எளிதில் உடைகிறதா என்றும் பார்க்கலாம். எளிதாக உடைந்தால் அது ஃபிரெஷான முள்ளங்கி என்று அர்த்தம்.
முள்ளங்கி புதியதா இல்லையா என்பதை அதன் நிறத்தை வைத்தும் தீர்மானிக்கலாம். முள்ளங்கியில் பல வகைகள் உள்ளன, அவை நிறம் மற்றும் அமைப்பில் மாறுபடும், சிவப்பு முள்ளங்கி சற்று உறைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது, அதே சமயம் வெள்ளை முள்ளங்கி மிதமானதாகவும், சற்று இனிப்பாகவும் இருக்கும். சிவப்பு முள்ளங்கியின் சுவையும் வெள்ளை முள்ளங்கியிலிருந்து சற்று வேறுபட்டதாகவே இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என தெரியவில்லையா? எனில், இந்த பதிவு உங்களுக்கானது தான்!!!
தற்போது சிவப்பு முள்ளங்கி, ஜப்பானிய வெள்ளை முள்ளங்கி, பூசா முள்ளங்கியென பல வகையான முள்ளங்கிகள் கடைகளில் கிடைக்கின்றன. இத்தகைய சூழலில், முள்ளங்கியை வாங்கும்போது, அதன் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் தரம் குறைந்த முள்ளங்கியை அதிக விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். இதை தவிர்த்து, முள்ளங்கியின் தரத்தை வைத்து மட்டுமே முள்ளங்கியை வாங்குவது நல்லது.
கடைகளிலிருந்து எந்த வகையான முள்ளங்கியை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]