உத்தரபிரதேச மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அயோத்தி பல நூற்றாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நகரமாகும். ராமர் பிறந்த இடம் என்று அழைக்கப்படும் அயோத்தி வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தில் மூழ்கியுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து இன்று வரை அயோத்தி இந்துக்களுக்கான புனித யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
அயோத்தியின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் அதனை அனைத்து சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக மாற்றியுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்ப அயோத்தி முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அங்கு புதிய விமான நிலையம், ரயில் நிலையம் அமைக்கப்பட்டு நம்பமுடியாத வழிபாட்டு தலமாகவும் சுற்றுதலாத் தலமாகவும் அயோத்தி மாற்றப்பட்டுள்ளது.
அயோத்தி செல்ல பயணத் திட்டத்தை உருவாக்கும் முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ராமர் பிறந்த இடமாகவும் இந்துக்களின் ஆன்மிக புகலிடமாகவும் விளங்கும் அயோத்தி மகத்தான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. முன்பு சாகேத் என்று அழைக்கப்பட்ட அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது. ராமர் அயோத்தியில் பிறந்தவர் என்பதால் இது வரலாற்று ரீதியாக இந்துக்களின் மிக முக்கியமான பயண தலமாக கருதப்படுகிறது.
மேலும் படிங்க Bengaluru Tourism - பெங்களூருவின் பிரபலமான சுற்றுலா தலங்கள்
புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில், ஹனுமான் கர்ஹி கோயில், நாகேஷ்வர்நாத் கோயில், மணி பர்வத், சீதா கி ரசோய், த்ரேதா கே தாக்கூர் உள்ளிட்ட இடங்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் சென்று பார்க்கலாம்
ராமர் கோயில் திறப்பு விழா 22ஆம் தேதி நடைபெற இருப்பதால் அங்குள்ள ஏராளமான ஹோட்டல்கள் தற்போதே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்து கொண்டே இருக்க கூடும் என்பதால் ஹோட்டல்களில் முன்பதிவு செய்வது கடினமாக இருக்கலாம் என பயண ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
எனவே நீங்கள் ராமர் கோயிலுக்கு செல்ல விரும்பினால் ஹோட்டல் அறைகள் மற்றும் பயண டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இதை பற்றிய விவரங்களை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
இது சரயு ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இந்த இடம் யாத்ரீகர்கள் தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கோருவதற்கான இடமாகும். இங்குள்ள அமைதியான சூழல் மற்றும் இயற்கை காட்சிகள் உங்களை வசீகரிக்கும்.
ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்ட அழகான துளசி தோட்டம் உங்களை பிரமிப்பூட்டும். ராம்சரித் மானஸ் என்ற காவியத்தை எழுதிய புகழ்பெற்ற கவிஞர் துளசி தாஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இது கட்டப்பட்டது.
தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட இந்த கோவிலை மாலைநேர ஆரத்தி சடங்கின் போது பார்த்து பக்தி உணர்வில் மூழ்குங்கள்.
அயோத்தியின் உயிர்நாடியான சரயு நதியில் படகு சவாரி செய்து மகிழுங்கள்
பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்காக அயோத்தி பஜார், நகாஸ் மார்க்கெட் மற்றும் டெர்ஹி பஜார் போன்ற பரபரப்பான சந்தைகளுக்கு செல்லுங்கள்
மேலும் படிங்க கொடைக்கானல் - தென்னிந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளம்
மேக் மை ட்ரிப் தகவலின் அயோத்தி செல்ல செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் செல்ல சிறந்த நேரமாகும். மகிழ்ச்சியான, கலாச்சார சூழல், விளக்குகள் மற்றும் பஜனைகள் ஆகியவை உங்கள் அயோத்தி பயணத்தை மிகவும் இனிமையாக்கும்
பட்ஜெட்டிற்கு ஏற்ப சிறந்த ஹோட்டல் கண்டறிய பிரபலமான பயண இணையதளங்களை பயன்படுத்துங்கள். 3,000 ரூபாயில் ஆரம்பித்து 19,000 ரூபாய் வரை செலவழித்து இரண்டு நாட்களுக்கு தங்கும் வசதியை சில ஹோட்டல்கள் தருகின்றன.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]