தோட்டங்களின் நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் அனைவரும் சுற்றிப் பார்க்கும் வகையில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. பிரபலமான சிவன் கோயில்களில் தொடங்கி அமைதியான கடற்கரைகள் முதல் கண்கவர் அரண்மனைகள் என பல சுற்றுலாத்தலங்கள் இங்கு இருக்கின்றன. அவற்றில் டாப் 5 இடங்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பன்னர்கட்டா தேசிய பூங்கா
ஆயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பல இனங்களை உள்ளடக்கிய சரணாலயம் என்றால் அது பன்னர்கட்டா தேசிய பூங்கா தான். பெங்களூருவில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது. உயிரியல் பூங்கா, முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா, பாம்பு பூங்கா மற்றும் முற்காலத்து விலங்குகளுக்குத் தனி பூங்கா என பல சிறப்பம்சங்கள் பன்னர்கட்டா தேசிய பூங்காவில் இருக்கின்றன. இந்த இடம் மலையேற்றத்திற்கும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காளை கோயில்
பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த கோயில் என்றால் காளை கோயிலை குறிப்பிடலாம். சிவபெருமானின் வாகனமான காளையை போற்றி இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 4.5 மீட்டர் உயரம் மற்றும் 6 மீட்டர் அகலம் கொண்ட நந்தி சிலை நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இந்த நந்தி சிலை ஒற்றை கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டதாகும். பெங்களூருவை நிறுவிய கேம்பகவுடா திராவிட கட்டிடக்கலைப் பாணியில் இக்கோயிலை கட்டியுள்ளார். வரலாற்றையும், கட்டிடக்கலையையும் நேசிக்கும் நபர்களுக்கு இந்த இடம் வரப்பிரசாதமாகும்.
பெங்களூரு அரண்மனை
மற்றொரு சிறப்புமிக்க சுற்றுலாத்தளம் என பெங்களூரு அரண்மனையைக் குறிப்பிடலாம். பதினோராம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கட்டப்பட்ட வின்ஸ்டர் கோட்டையினை முன்மாதிரியாகக் கொண்டு பெங்களூரு அரண்மனை கட்டப்பட்டுள்ளது. மிக அற்புதமான இந்த இடம் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. அரண்மனையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் செதுக்கி உருவாக்கப்பட்ட உருவங்கள் இதனை பெங்களூரின் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுகிறது. பெங்களூரு அரண்மனையானது மைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்கான் கோயில்
ஹரே கிருஷ்ணா மலைக்குன்றின் மேற்கில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் அதன் கட்டிடக்கலை அழகிற்கும் , மத முக்கியத்துவத்திற்கும் புகழ்பெற்றதாகும். கிருஷ்ண பகவானுக்காக இந்த அழகிய கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் நவீன கட்டடக்கலைகளை உள்ளடக்கி நீயோ கிளாசிக்கல் பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
நந்தி மலை
வானிலையை விரும்பும் நபர்களுக்கு பெங்களூரு அருகே அமைந்துள்ள நந்தி மலை ஒரு அற்புதமான சுற்றுலா தளம் ஆகும். நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் நந்தி மலை அமைந்துள்ளது. இங்கிருந்து ஒற்றைக்கல் கிரானைட் பாறையின் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கலாம். நந்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குச் செதுக்கப்பட்ட வளைவுகளையும் வர்ணம் பூசப்பட்ட சுவர்களையும் இவற்றைத் தாங்கும் தூண்களையும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கலாம். இந்த நந்தி மலை பாராகிளைடிங் மற்றும் மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation