கொடைக்கானல் - தென்னிந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளம்

நகர வாழ்க்கை மற்றும் வேலையில் அலைச்சல் காரணமாக சோர்வாக உணர்கிறீர்களா ? அப்போ உடனடியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள்.

 
Main kodai

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கொடைக்கானல் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அழகிய மலை வாசஸ்தலமாகும். கொடைக்கானல் அதன் பசுமையான காடுகள், மூடுபனி, மலைகள் மற்றும் அமைதியான ஏரிகளுக்கு பெயர் பெற்றது. இது அனைத்து விதமான பயண ஆர்வலர்களுக்கும் சிறந்த இடமாகும். கொடைக்கானலுக்கு நீங்கள் சென்றால் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை இங்கே பதிவிடுகிறோம்.

 kodai

நட்சத்திர ஏரி

 kodai

கொடைக்கானலுக்கு சென்றால் நீங்கள் முதலில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் நட்சத்திர ஏரி. இது மூன்று மீட்டர் ஆழமுள்ள செயற்கை நட்சத்திர வடிவ ஏரியாகும். 1863ல் ஏரியை உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த ஏரி பசுமையான மரங்களால் சூழப்பட்டுள்ளது. ஏரியில் படகு சவாரி செல்லும் போது சுற்றி இருக்கும் மலைகளின் அற்புதமான காட்சி கிடைக்கும். ஏரியைச் சுற்றி நடந்தும் அல்லது அங்குள்ள இருக்கைளில் அமர்ந்தும் இயற்கையை ரசிக்கலாம்.

 kodai

கோக்கர்ஸ் வாக்

இந்த நடைபாதை 1872ல் லெப்டினன்ட் கோக்கரால் செங்குத்தான மலைச்சரிவில் கட்டப்பட்டது. கோக்கர்ஸ் வாக் பாதை அழகான வனப்பகுதி வழியாக பயணிக்கிறது. நட்சத்திர ஏரிக்கு மிக அருகிலேயே இந்த நடைபாதை உள்ளது. இங்கு நீங்கள் காணக்கூடிய கண்கொள்ளாக் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளின் பரந்த காட்சிகளை அனுபவிக்கலாம். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த பாதை திறந்திருக்கும்.

பூம்பாறை கிராமம்

இந்த கிராமம் பூண்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற சிறிய கிராமமாகும். இது பசுமை பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட பிரமிப்பூட்டுகிற அடுக்கடுக்கான நிலப்பரப்புகளை கொண்டுள்ளது. பூம்பாறைக்கு சென்றால் வேலப்பர் கோயில் அல்லது முருகன் கோயிலில் தரிசனம் செய்யுங்கள். இக்கிராமத்தில் உள்ள காட்சிமுனை இயற்கையான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது.

 kodai

டால்பின் மூக்கு

கொடைக்கானலை சுற்றிலும் உள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் வியப்பூட்டும் காட்சிகளை டால்பின் மூக்கில் நின்று பார்க்கலாம். டால்பினின் மூக்கை போன்று தட்டையான பாறை குன்றில் விளிம்பில் இந்த இடம் அமைந்திருப்பதால் டால்பின் மூக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தை அடைய வட்டக்கானல் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வேண்டும்.

மேலும் படிங்கமறக்க முடியாத அனுபவங்களை தரும் டாப் -5 சுற்றுலாத் தலங்கள்

குறிஞ்சி ஆண்டவர் கோயில்

கொடைக்கானலில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக குறிஞ்சி ஆண்டவர் கோயில் பார்க்கப்படுகிறது. இது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அழகான கட்டடக்கலை மற்றும் அமைதியான சூழலுக்கு புகழ்பெற்ற இக்கோயிலை தவற விடக்கூடாது. மலை மீது அமைந்துள்ள இந்த கோயில் சுற்றி இருக்கும் பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.

மேலும் படிங்கவெக்கேஷனை என்ஜாய் செய்யும் நடிகை மாளவிகா மோகனன்!

பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் பயணத்தில் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் பிரையண்ட் பூங்கா. இங்குள்ள 160 ஆண்டுகள் பழமையான போதி மரம் பிரையண்ட் பூங்காவின் முக்கிய ஈர்ப்பாகும். பல்வேறு வகையான ரோஜாக்களை காண ரோஜா மலர்கள் பிரிவும் உள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தோட்டக்கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP