10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு முறை தோல்வி, ஆனால் இன்றோ இவருக்கு 3 பட்டப்படிப்பு மற்றும் ஒரு PHD. அது மட்டும் இல்லை குழந்தைகளின் கல்விக்காக 15க்கும் மேல் பள்ளிகள் நடத்தி வரும் பெண் சாதனையாளர் தான் சவிதா கண்ணன். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். தன் 19 வயதில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று தைரியமாக முன் வந்து இன்று பல வெற்றி சாதனை செய்து வருகிறார் சவிதா கண்ணன். தற்போது சவிதா கண்ணன் மும்பையில் குழந்தைகளுக்காக வில்லீஸ் என்ற பெயரில் 15க்கும் மேல் ப்ரீ ஸ்கூல்ஸ் நடத்தி வருகிறார். குறிப்பாக இவர் நடத்தி வரும் பள்ளிகளில் முழுக்க முழுக்க வேலை செய்பவர்கள் பெண்கள் தான். மகளிர் தினத்தை முன்னிட்டு சவிதா கண்ணன் நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு தன் கல்வி பயணம் குறித்து சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
ஏன் ப்ரீ ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு நினைச்சீங்க?
முதல்ல நான் வீட்டில் டியூஷன் தான் எடுத்திட்டு இருந்தேன், நாலு வருஷம் வேலை பார்த்தேன். அப்போ ப்ரீ ஸ்கூல் மாதிரி ஸ்டார்ட் பண்ணினா ஆரம்பத்திலேயே கொஞ்சம் இங்கிலீஷ் திறனை அதிகப்படுத்தலாம் அப்படின்னு நினைத்தேன். ஏன்னா அந்த கஷ்டத்தை நான் அனுபவித்து இருக்கேன். நான் 10 ஆம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம் படித்து 10thல போர்டு எக்ஸாம் இங்கிலீஷ் அப்போ நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனால ப்ரீ ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணி ஆரம்பத்தில் இருந்து குழந்தைகளுக்கு இங்கிலீஷ் நான் சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு 2019 ஆம் ஆண்டு ஆரம்பிச்சது தான் இந்த ப்ரீ ஸ்கூல். ஏன்னா ஆறு வயசுக்குள்ள தான் குழந்தைங்க நிறைய கத்துப்பாங்க.
நாம் படித்த காலத்தில் எல்லாம் ப்ரி-ஸ்கூல் அதிகமா கிடையாது. ஆனா இப்போ ஏன் ப்ரி-ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு நினைச்சிங்க?
இப்போலாம் நிறைய பொண்ணுங்க பிசினஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி இல்லனாலும் ஏதாவது ஒரு சின்ன வேலைக்கு போறாங்க. அவங்க கிட்ட வீட்டில் குழந்தைய என்ன பண்ணுவீங்க அப்படின்னு கேட்கும் போது ஸ்கூல்ல விட்டுடுவோம் இல்லன்னா யாரையாவது பார்த்துக்க வச்சுப்போம் அப்படின்னு சொன்னாங்க. அப்போ அவங்க பணம் செலவு பண்ண ரெடியா இருக்காங்க. அப்போ நான் யோசிச்சேன் ஏன் ப்ரி-ஸ்கூல் ஸ்டார்ட் பண்ண கூடாது? அதே மாதிரி இன்னொரு சம்பவம் அதுவுமே எனக்கு ப்ரீ ஸ்கூல் ஆரம்பிக்கணும் தோண வச்சது. நான் சென்னையில் என்னோட வீட்டுக்கு போயிருந்தேன் அப்போ ஒரு பையன் அழகா சிரிச்சுக்கிட்டே இருந்தான் அவன்கிட்ட போயி கை கொடுத்தேன். அவன் இருங்க ஆன்ட்டி நான் எங்க அம்மா கிட்ட போய் கேட்டுட்டு வந்து கை கொடுக்கிறேன், எங்க அம்மா யாருகிட்டயும் டச் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, அப்படின்னு சொன்னான். நம்ம அம்மா அந்த காலத்துல எல்லாம் அப்படி சொல்லி வளர்க்கவில்லை. அவங்க வளர்த்தால் போதும் அப்படின்னு நினைச்சாங்க. ஆனா இந்த காலகட்டத்தில் அம்மா அப்பா தாண்டி ஒரு மூன்றாவது ஆள் டீச்சர் தான். அதுக்காக நான் அவங்க அம்மா அப்பாவ குறை சொல்லவில்லை. இந்த காலகட்டம் அப்படி ஆகிவிட்டது மற்றும் இன்னும் காலம் போக போக இது அதிகமாயிட்டே தான் போகுமே தவிர குறையாது.
உங்க ஸ்கூல்ல டீச்சிங் முறை எப்படி இருக்கும்?
எங்க ஸ்கூல்ல குழந்தைகளுக்கு ஆடியோ வீடியோ எல்லாம் போட்டு காமிக்க மாட்டோம். எல்லாமே ஆக்டிவிட்டிஸ்தான். நம்ம காலத்துல எல்லாம் மணல்ல போய் விளையாடுவோம் ஆனா இப்போ எங்கேயுமே மணலை பாக்க கூட முடியல எல்லாமே அப்பார்ட்மெண்ட் அந்த மாதிரி ஆயிடுச்சு. நான் குழந்தைகளுக்கு ஒரு அரிசி எப்படி வருது அப்படின்னு கூட ஆக்டிவிட்டி மூலம் செய்து காமிக்கணும் அப்படின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மும்பையில வயல் வெளிகள் மத்தியில் ஒரு ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு.
குழந்தைங்களுக்கு அதிகரித்த மொபைல் அடிக்ஷன் பற்றி ஒரு ஆசிரியரா நீங்க என்ன நினைக்கிறீங்க?
இப்போயெல்லாம் நாம் கூட நிறைய சோசியல் மீடியால போய் கத்துக்கிறோம். நம்மளாலயே மொபைல் இல்லாம இருக்க முடியல அப்புறம் குழந்தைகளுக்கு அடம் பிடிக்கிறாங்க அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம மொபைல் குடுத்துடுறாங்க. முடிந்த வரைக்கும் குழந்தைகள் கூட டைம் ஸ்பென்ட் பண்ண பாருங்க. அவங்க கேட்கிற கேள்வி எல்லாம் பதில் சொல்லுங்க. இப்போலாம் குழந்தைங்க அழுதாலே அழக்கூடாது அப்படின்னு திட்டுறாங்க. ஆனா அதுவுமே சிரிக்கிறது மாதிரி ஒரு எமோஷனல் தானே அதை ஏன் கண்ட்ரோல் பண்ணனும். எனக்கு தெரிந்த ஒரு குழந்தை நல்லா சாப்பிடுது அப்படின்னா அது அந்த குழந்தையோட ஜீன் DNA. அதுக்காக உங்கள் குழந்தையை கம்பேர் பண்ணக்கூடாது. உங்க குழந்தைங்கள என்கரேஜ் பண்ணுங்க எது பண்ணினாலும் என்கரேஜ் பண்ணுங்க. ஒரு அம்மா சமைக்கிறாங்க என்றால் அதை குழந்தை நல்லா இருக்குன்னு சொல்லணும்னு எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதை ஏன் அவங்க குழந்தைகளுக்கு செய்வதில்லை.
அடுத்த ஐந்து வருஷத்துல உங்களோட இலக்கு என்ன?
நான் எப்போதுமே எனக்கு இலக்கு என்று வைத்ததே கிடையாது. ஏன்னா நான் இப்போ அஞ்சு வருஷத்துல 50 பிரீ ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு நினைச்சா அதுல நாற்பத்தி எட்டு நா ஆரம்பிச்சாலும் அது எனக்கு சந்தோஷத்தை கொடுக்காது. இதுவே நான் என்னோட பெஸ்ட் கொடுத்துவிட்டு என்னோட வேலைய பாத்துட்டு நான் போய்க்கிட்டே இருந்தா, அதுல நான் 40 பண்ணா கூட எனக்கு அது சந்தோசம் தான். அதனால எப்போதுமே நான் என்ன நம்புவேன். என்னோட பெஸ்ட் நான் கொடுப்பேன் அவ்வளவுதான்.
பெண்களோட முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது குடும்பமா அல்லது சமூகமா?
பெண்களோட முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது என்னவென்றால் அவங்களோட சிந்தனை தான். எப்போதுமே நாம ஒன்னு பண்ணனும்னு நினைச்சோம்னா பண்ண ஆரம்பிச்சிடனும். குழந்தைங்க இருக்காங்க குடும்பம் இருக்காங்க அவங்கள பாத்துக்கணும் இவங்கள பாத்துக்கணும் அப்படின்னு சொல்லி மத்தவங்கள குறை சொல்ல கூடாது. உங்களுக்கு ஒன்னு பண்ணனும் தோணுச்சுன்னா பண்ண ஆரம்பிச்சுடுங்க. அது வெற்றியோ தோல்வியோ அது ஸ்டார்ட் பண்ணி பாத்துருங்க. ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். பிசினஸ் ஆரம்பிச்சா பணம் லாஸ் ஆனா என்ன பண்றது குழந்தைகள் என்ன பண்றது இந்த சொசைட்டி நம்மள என்ன சொல்லும் அப்படி இப்படின்னு யோசிக்காம நீங்க பண்ணனும் நினைச்சத உடனே பண்ண ஆரம்பிங்க.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation