Women's Day 2025: தூத்துக்குடி டூ ஜப்பான்; பிசினஸ் உலகில் பல சாதனைகள் செய்யும் தமிழ் பெண்

ஜப்பானில் வெற்றிகரமாக பிசினஸ் செய்து கொண்டிருக்கும் தமிழ் பெண் விஜயலக்ஷ்மி கருப்பசாமி. இவர் ஒரு இளம் தொழிலதிபர். மகளிர் தினத்தை முன்னிட்டு விஜயலக்ஷ்மி கருப்பசாமி நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
image

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னது போல, தன் கனவுக்காக கடல் கடந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து சென்று பல சாதனைகள் செய்து வருகிறார் இந்த இளம் பெண். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து தமிழில் கல்வி கற்று இன்று ஜப்பானில் வெற்றிகரமாக பிசினஸ் செய்து கொண்டிருக்கும் தமிழ் பெண் விஜயலக்ஷ்மி கருப்பசாமி. இவர் ஒரு இளம் தொழிலதிபர். மகளிர் தினத்தை முன்னிட்டு விஜயலக்ஷ்மி கருப்பசாமி நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

உங்களைப் பற்றி சொல்லுங்க, உங்க பெற்றோர் பள்ளி படிப்பு கல்லூரி அந்த மாதிரி சொல்லுங்க?


என் பெயர் விஜயலட்சுமி கருப்பசாமி. நான் தமிழ்நாட்டுல தூத்துக்குடி மாவட்டம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர். அப்பா அந்த காலத்து ஏட்டு கல்வி தான் படிச்சிருக்காங்க. அம்மா அங்கன்வாடி பள்ளி டீச்சர். என் கூட பிறந்தவங்க ஒரு அக்கா ஒரு அண்ணா நாங்க மூணு பேருமே பிளஸ் டூ வரைக்கும் தமிழ் தான் படிக்கணும் என்று தமிழ்ல தான் முடிச்சோமே. இதை நான் இந்த இடத்துல சொல்லணும்னு நினைக்கிறேன் ஏன்னா நிறைய பேரு தமிழ் படித்தால் நம்மளால எதுவுமே பண்ண முடியாது அப்படின்னு நினைக்கிறாங்க. நாங்க இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமே படிப்பு தான். படிப்ப ஆயுதமா புடிச்சு தான் நாங்க இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம். இன்ஜினியரிங் முடிச்சுட்டு 21 வயசுல பெங்களூர் போய் என்னோட ஃபர்ஸ்ட் பிசினஸ் அங்க தான் ஆரம்பிச்சேன். இந்தியாவில் நான் தொடங்கின இரண்டாவது தொழில் பாக்ஸ் அகாடமி. இது வழியா ஐடி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஸ்டூடண்ட்ஸ்க்கு ட்ரைனிங் கொடுத்து 14 வருஷமா தொழில் அதிபரா இருக்கேன்.

ஜப்பான் நாட்டுக்கு சென்ற நிகழ்வு எப்படி நடந்தது?


லிங்டின் பக்கத்துல ரெஜிஸ்டர் பண்ணி இருந்த என்னோட ப்ரொபஷனல் ப்ரொபைலை பார்த்துட்டு ஜப்பான்ல இருக்கிற யுனிவர்சிட்டில மாணவர்களுக்கு ட்ரைனிங்காக பாக்ஸ் அகாடமிக்கு அனுப்புவதற்கு என்னை கூப்பிட்டு இருந்தாங்க. அந்த வாய்ப்பு நான் சரியா பயன்படுத்த இந்த ஒர்க் ஷாப்பில் சேர்வதற்காக ஜப்பானிலிருந்து மாணவர்கள் வர ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட 250க்கு மேல ஜப்பான் மாணவர்களுக்கு நான் ட்ரைனிங் கொடுத்து இருக்கேன். இப்படி தான் ஜப்பானுக்கும் எனக்கும் தொடர்பு வந்தது. ஜப்பான்ல நம்ம மேலயும் நம்ம ப்ராடக்ட் மேலயும் நம்பிக்கை வந்தா மட்டும் நம்ம பொருளை பயன்படுத்துவாங்க அப்படின்னு புரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் தான் அந்த நாட்டுல நான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு முடிவு பண்ணேன்.

IMG_2956

ஜப்பான்ல பிசினஸ் பண்றது ஈஸியா?


ஜப்பான் நாட்டில் தொழில் பண்றதுக்கு ரெண்டு விதமான விசா இருக்குது. ஒன்னு பிஸ்னஸ் மேனேஜர் விசா இன்னொன்னு ஸ்டார்ட் அப் விசா. பிஸ்னஸ் மேனேஜர் விசா கிடைக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது நிறைய டாக்குமெண்டேஷன் வேலை எல்லாம் இருக்கும். இது பெரிய ப்ராசஸ். நான் ஸ்டார்ட் அப் விசா வாங்க என்ன பண்ணனும் அந்த வேலையை ஆரம்பித்தேன். ஜப்பான் நாட்டில் ஸ்டார்ட் அப் விசா வாங்குன முதல் சவுத் இந்தியன் இரண்டாவது இந்தியன் நான்தான். அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

ஜப்பான்ல தொழில் செய்பவரா உங்களோட அனுபவம் எப்படி இருக்கு?


நான் 14 வருஷமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். ரெண்டு வருஷம் தான் ஜப்பான்ல பிசினஸ் பண்றேன். தொழிலதிபரா என்னோட மதிப்பு இப்போ அதிகமாகி இருக்கு. மக்கள் என்ன பார்க்கும் விதம் மாறி இருக்கு. வாய்ப்புகளும் அதிகமா இருக்குது. இந்த அழகான நாடு கொடுக்கிற அனுபவம் வாழ்க்கை முழுவதும் நான் எடுத்துட்டு போகணும் எடுத்துட்டு போற ஒன்றா கண்டிப்பா மாறும். ஜப்பானீஸ் பிராண்ட் அந்த பிராண்டு எடுக்கும்போது இன்னொரு நபரா முக்கியமா நம்ம மாத்துவோம். அதே மாதிரி ஐடி வேலைவாய்ப்பு ஜப்பான் நாட்டுல கொட்டி கிடக்குது. சேலரியும் அதிகம் தான். ஆனா ஜப்பான் மொழி தெரிந்தால் நமக்கு ரொம்ப நல்லது. 3 மாசத்துக்கு முன்னாடி ஜெர்மனி ஸ்வீடன் ஐரோப்பிய நாடுகளுக்கு போயிருந்தேன், மார்க்கெட் நிலவரத்தை தெரிஞ்சுக்கிட்டேன். சீக்கிரமாவே எங்களோட பாக்ஸ் அகாடமி ஐரோப்பிய நாட்டிலும் பிரான்ச் ஓபன் பண்ண பிராசஸ் போய்கிட்டு இருக்கு.

DSC09415

ஜப்பானியர்களோட கலாச்சாரம் மொழி கல்வி பத்தி சொல்லுங்க?


ஐடியாலஜியில் ஜப்பாணியர்கள் ரொம்பவே ஸ்ட்ராங். ஆனா ஜப்பான் மொழியில் மட்டும் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிஞ்சிருக்கும். ஜப்பானியர்கள் அமைதியா இருப்பாங்க. அமைதியா இருப்பதால வெளில போகும்போது சத்தமா நாம பேசக்கூடாது. நாம எல்லாம் கண்ண பாத்து மட்டும் பேசுவோம். அதுதான் சரின்னு நம்ம நினைப்போம். ஆனா இங்க கண்ண பாத்து நேரா பேசக்கூடாது. அப்படி பேசினால் அது அவங்களோட பிரைவசி ஏதோ பண்ற மாதிரி இருக்கும். கை கொடுக்கக் கூடாது, தலை முன்னாடி பக்கமா வளைச்சு குனிந்து மரியாதை சொல்ற முறைதான் இங்க. இப்போ யாரோ ஒருத்தங்க பிசினஸ் கார்டு கொடுத்தாங்கனா அதை வாங்கி உடனே பர்சில் வைக்க கூடாது, அதை வாங்கி ஒரு நிமிடம் பார்த்துட்டு அப்புறமா வைக்கணும். அவங்க சுகாதாரம் பாதுகாப்பு எல்லாம் நல்லாவே இருக்கும்.

ஜப்பானியர்களின் உணவுப் பழக்க வழக்கம் உங்களுக்கு செட் ஆச்சா?


அதிகமா நான் வெஜ் தான் சாப்பிடுவார்கள். அப்படின்னாலும் ஹெல்த்தியான சாப்பாடா எப்போதும் எடுத்துப்பாங்க. வெஜிடபிள் சாப்பாடு அதிகமா சாப்பிடுவாங்க. சூப்பு வகை உணவுகளை அதிகமா எடுத்துப்பாங்க. இங்க பழங்கள் எல்லாமே இங்க ரேட் ரொம்ப அதிகம். ஒரு மாம்பழம் 5 ஆயிரம் தர்பூசணி பத்தாயிரம் அவ்ளோ விலை இருக்கும். ஆரம்பத்தில் எனக்கு இங்கு உணவு பழக்கம் கஷ்டமாக இருந்தாலும் இப்போ ரொம்ப பழகிட்டேன்.

ஜப்பானில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறித்து?


கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக நிறைய பேர் விரும்ப மாட்டாங்க. அப்படி தான் இங்கே இருக்கிற பொண்ணுங்க மென்மையான வேலையை எதிர்பார்த்து போறாங்க. தலைமைப் பொறுப்பு அரசியல் பெண் தலைவர்கள் இந்கு குறைவுதான். பெண் தலைமை பொறுப்பு இருப்பதை வியப்பாக பார்ப்பார்கள். குறிப்பா லேடிஸ் தனியா பாதுகாப்பா இங்க இருக்க முடியும். லவ் பண்ணாலும் வீட்டு சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP