தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடான கொள்கைத் திருவிழா விழுப்புரம் மாவட்டாம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் லட்சக்கணக்கான தோழர்கள் முன்பாக எழுச்சி உரையாற்றினார். வழக்கமாக விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி கூறி ஊக்கப்படுத்துவார். இந்த நிலையில் கட்சியின் முதல் மாநாட்டிலும் தவெக தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசியலில் பயன்மின்றி தடம் பதித்த காரணம் குறித்து குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். விஜய்யின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டி ஸ்டோரி சொல்லும் முன்பாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருந்தால் என்ன ? போனால் என்ன ? என்று கடுமையாக சாடினார்.
விஜய்யின் குட்டி ஸ்டோரி
ஒரு நாட்டில் பெரிய போர் நிகழ இருந்தது; அப்போது அங்கு சக்திவாய்ந்த தலைமை; பச்ச புள்ளையிடம் தலைமை பொறுப்பு சென்றது; அந்த பையன் தலைமை ஏற்று போருக்கு புறப்பட கிளம்பினான்; அங்கிருந்த பெரிய தலைகள் உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை; அத்தனை எதிரிகளை சமாளித்து, தாக்கு பிடித்து, கட்டாயமாக ஜெய்க்கணும் என சொன்னாங்க; அந்த சின்ன பையன் சொன்னத செஞ்சான்; பாண்டிய வம்சத்தை சேர்ந்த பையன் பற்றி தெரியலான படிச்சு தெரிஞ்சுகோங்க; சங்க இலக்கியத்தில் இருக்கு; கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் எனக் கூறினார் விஜய்.
வாத்தியார் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் கூத்தாடி - விஜய்
அரசியலுக்கு வரேன்னு சொன்னா கூத்தாடி கூத்தாடினு சொல்றாங்க; கூத்து கலை மக்களோடும் மன்னோடும் கலந்த ஒன்று; நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆர், பக்கத்து மாநிலத்தை ஆண்ட என்.டி.ஆர் இருவருமே கூத்தாடிகள் தான், ஆனால் இருவரும் மக்கள் மனதில் ஆகச்சிறந்த தலைவர்களாக இடம் பிடிச்சவங்க; கலை, இலக்கியம், பன்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை உணர்த்தும் கூத்து தான் இப்போதைய சினிமா.
சமூக புரட்சிக்கு உதவியது சினிமா, திராவிட இயக்கம் வளர்ந்தது சினிமாவால், கூத்து என்பது சாதாரண வார்த்தை கிடையாது; கூத்து எல்லாவற்றையும் பேசும்; உண்மையாகவும் உணர்வோடும் பேசும்.
சோகமின்றி கொண்டாட்டமாக எல்லாவற்றையும் கூத்து பேசும்; கூத்தாடி என்பது கொண்டாட்டத்தின் குறியீடுல்; கூத்தாடியின் கோபம் கொப்பளித்தால் அதை தடுக்க முடியாது. அன்றைக்கு கூத்து இன்றைக்கு சினிமா என விஜய் பேசினார்.
மேலும் படிங்கதவெக தோழர்களுக்கு விஜய் இட்ட கட்டளை "இடையூறு ஏற்படுத்தாம மாநாட்டுக்கு பாதுகாப்பாக வாங்க"
பிரபலங்கள் தொடர்புடைய தகவல்களை உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation