தவெக தோழர்களுக்கு விஜய் இட்ட கட்டளை "இடையூறு ஏற்படுத்தாம மாநாட்டுக்கு பாதுகாப்பாக வாங்க"

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் மிகுந்த பாதுகாப்பாக வர வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கட்டளையிட்டுள்ளார். காவல்துறையின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
image

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அதாவது வெற்றிக் கொள்கை திருவிழா விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றவுள்ளது. மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள், வருகை தரும் தோழர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் காவல்துறையின் அறிவுறுத்தல்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பாக நான்காவது முறையாக தோழர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இம்முறை கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் மட்டுமின்றி தனது தனிப்பட்ட கணக்கிலும் மாநாடு தொடர்பாக பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டு இருப்பது.

tvk vijay

தோழர்களுக்கு தவெக தலைவர் விஜயின் அழைப்பு

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பாக வாங்க - விஜய்

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க"தமிழ்நாடு இனி சிறக்கும், நாடெங்கும் கொடி பறக்கும்" த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

image

தவெக மாநாடு

ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை உற்று நோக்குகிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி கட்சியின் முதல் படி என மாநாட்டை விஜய் குறிப்பிடுவதால் கூட்டணி கணக்குள் மாறலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்திய அளவிலும் தேசிய கட்சிகளால் விஜய் தலைமையில் நடக்கும் மாநாடு கவனிக்கப்படுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP