சினிமா ஓய்வுக்கு பின் வேள்பாரி படிப்பேன் - மேடையில் ரஜினிகாந்த் கலகல பேச்சு

வேள்பாரி புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை என்றும் சினிமா ஓய்வுக்கு பிறகு வேள்பாரி முழுவதும் படிக்க ஆசை என்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசியுள்ளார். ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொண்டதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
image

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வீர யுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையானதை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வேள்பாரி புத்தக்கத்தின் எழுத்தாளர் சு.வெங்கடேசன், வேள்பாரியை படமாக எடுக்கும் உரிமை பெற்றுள்ள இயக்குநர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ரோகிணி, நீயா நானா கோபிநாத் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வேள்பாரி புத்தகத்தின் சிறப்புகளை குறிப்பிட்டு சு.வெங்கடேசனை பாராட்டி பேசினர். நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது முழு பேச்சு (அரசியல் தவிர்த்து) இந்த பதிவில் பார்ப்போம்.

மிஸ்டர் ரஜினிகாந்த் தவறாக பேசக் கூடாது

வேள்பாரி புத்தக்கத்தை 25 விழுக்காடு மட்டுமே படித்துள்ளேன். ஏன் முழுவதுமாக படிக்கவில்லை என்பதை பின்னர் கூறுகிறேன் என உரையை தொடங்கினார். அறிவு சொல்லும் என்ன பேசணும், திறமை சொல்லும் எப்படி பேசணும், அரங்கம் சொல்லும் எவ்வளவு பேசணும், அனுபவம் சொல்லும் எதை பேசணும் பேசக் கூடாது. சில மாதங்களுக்கு முன் இதே கலைவாணர் அரங்கில் பேசிய பேச்சு பரபரப்பு ஆனதால் மிஸ்டர் ரஜினிகாந்த் இம்முறை எந்த தவறும் இன்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஷங்கர் எடுக்கவுள்ள வேள்பாரி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். நீயா நானா கோபிநாத் பாட்டும் நானே பாவமும் நானே என்பது போல் அவரே வக்கீல், நடுவராக செயல்பட்டு பேசக்கூடியவர், நடிகை ரோகிணி அறிவாளி மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். சரி ஹீரோ சிவக்குமாரை கூப்பிட்டு இருக்கலாம். மகாபாரதம் பற்றி எதை கேட்டாலும் பேசுவார். கமல்ஹாசனை கூப்பிட்டு இருக்கலாம். 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை ஏன் கூப்பிடுகிறார்கள் எனத் தோன்றியது.

History is His Story - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

நம் நாட்டில் தெருவுக்கு தெரு ஒரு கதை இருக்கும். History is ஹிஸ் ஸ்டோரி. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். புத்தக வாசிப்பு பழக்கம் மிக நல்லது. அது ஒருவரை சிந்திக்க, சிரிக்க வைக்கும். ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு உருவானது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் பெயர்களை குறிப்பிட்ட ரஜினிகாந்த் பர்வா நாவல் 36 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. அது மகாபாரதம் 200 வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால் எப்படி இருக்குமென எழுதப்பட்டு இருக்கும்.

உடல் பொருள் ஆவி, ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், மதனின் வந்தார்கள் வென்றார்கள், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். இதில் யாருக்காக அழுதான் என்ற புத்தகத்தில் கதாபாத்திரம் யாருக்காக அழுதான் எனத் தெரியாது. ஆனால் நாம் அந்த புத்தகத்தை படித்து எனக்கு அழுகை வந்தது.

சினிவா ஓய்வுக்கு பின் வேள்பாரி படிப்பேன்

நண்பர் சொல்லி வேள்பாரி புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். 25 விழுக்காடு மட்டுமே படித்துள்ளேன். என்னுடைய சினிமா ஓய்வுக்கு பிறகு வேள்பாரி புத்தகத்தை படிப்பேன். கலை எந்த வடிவில் இருந்தாலும் தமிழர்கள் அதை ரசிப்பதில் மன்னர்கள். கலையை ரசிப்பதில் ஜாதி, மொழி, மதம் எதுவும் இருக்காது. தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். உங்களை காலில் விழுந்து வணங்குகிறேன் என சூப்பர்ஸ்டார் உரையை முடித்தார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP