herzindagi
image

42 வயதில் தனது முதல் கர்ப்பத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டர் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்

பிரபல பாலிவுட் கணவன், மனைவியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் தனது முதல் குழந்தையின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். ஆம், கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
Editorial
Updated:- 2025-09-23, 14:50 IST

42 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், தான் தாய்மை அடைந்திருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் அழகாக பேபி பம்ப் போஸ் கொடுத்து வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் பிரபலமான கணவன், மனைவியாக வளம் வந்து கொண்டு இருக்கும் இருவரும் தனது முதல் குழந்தையில் வருகை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள். கத்ரீனா கைஃப் வெளியிட்ட புகைப்படத்தில் வயிற்றில் இருக்கும் தனது குழந்தையின் பன்பை கட்டி அணைத்துக்கொண்டு தாய்மை உணர்வுடன் போஸ் கொடுத்து இருப்பார். விக்கி கௌஷல் இருவரையில் தடவி கொண்டு, ஒரு காப்பாளன் போல் பேஸ் கொடுத்து இருப்பார். இந்த புகைப்படத்தில் இருவரும் சந்தோஷத்தின் எல்லையில் இருப்பார்கள்.

இவரும் சமூக தளத்தில் வெளியிட்ட செய்தியின் படி “ ஆம், நீங்கள் படிப்பது சரிதான். தங்கள் இருவரும் கர்ப்பத்தை வெளிப்படுத்துகிறோம், இரண்டு பேரும் கூடிய விரைவில் பெற்றோர்களாகப் போகிறோம்” என்று கூறியிருந்தனர். மேலும், “ எங்களது இருவரின் வாழ்க்கையில் எடுத்தக்கட்டமான புதிய அத்தியாயத்தை முகவும் மகிழ்ச்சியுடன் நிறைந்த இதயத்துடன் தொடங்குவதாக ஒரு வணக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்”.

 

 

 

 

 

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

மேலும் படிக்க: விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்; வைரலாகும் புகைப்படங்கள்

 

குறிப்பாக இவரும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். சில தகவல் படி அக்டோபர் மாதத்தில் இந்த குழந்தை பிறக்கும் என சொல்லப்படுகிறது. ஒரு மேடை நிகழ்ச்சியில் மூலம் இருவருக்கும் மலர்ந்த காதல் கதை இன்று திருமணம் முடிந்து, இருவரும் அடுத்தகட்டத்தை நோக்கி வாழ்க்கையைப் பயணம் செய்ய காத்திருக்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர்கள் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

 

மேலும் படிக்க: ஃபேண்டசி பாணியில் பார்வையாளர்களை ஈர்த்ததா மிராய் திரைப்படம்? ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்

 

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: instagram

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]