herzindagi
image

Mirai twitter review: ஃபேண்டசி பாணியில் பார்வையாளர்களை ஈர்த்ததா மிராய் திரைப்படம்? ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்

Mirai twitter review: புராணங்களை அடிப்படையாக கொண்டு ஃபேண்டஸி பாணியில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் மிராய் திரைப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டர் (எக்ஸ் தளம்) தளத்தில் பலர் பதிவிட்டுள்ளனர்.
Editorial
Updated:- 2025-09-12, 12:18 IST

Mirai twitter review: தெலுங்கில் கார்த்திக் இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெகபதி பாபு உள்ளிடோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் மிராய். இந்து புராணங்களை அடிப்படையாக கொண்டு ஃபேண்டசி பாணியில் அமைந்துள்ள இத்திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Su From So ott release: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வசூல் சாதனை படைத்த கன்னட திரைப்படம்; ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

 

ஃபேண்டசி திரைப்படம்:

 

ஏற்கனவே, தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், மிராய் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதிலும், இந்த திரைப்படமும் இந்துக்களின் புராணத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டதால், ஹனுமான் திரைப்படம் போன்று இத்திரைப்படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை ட்விட்டர் (எக்ஸ் தளம்) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Mirai movie

மேலும் படிக்க: Madharaasi movie twitter review: ரசிகர்களை ஈர்த்ததா சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணி? மதராஸி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்

 

மிராய் விமர்சனம்:

 

அதன்படி வெங்கி ரிவியூஸ் என்ற ட்விட்டர் (எக்ஸ் தளம்) பக்கத்தில், "மிராய் திரைப்படம் முதல் பாதி முழுக்க மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், இடைவேளைக்கு முந்தைய காட்சி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது. இரண்டாம் பாதி சில இடங்களில் வேகம் குறைந்தாலும், சில அதிரடி காட்சிகளும், ஒரு அசத்தலான உச்சக்கட்ட காட்சியும் படத்தை சிறப்பாக தாங்கிப் பிடிக்கின்றன. கதை சொல்லும் விதம் சில நேரங்களில் தடுமாறினாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பம் தான். அற்புதமான விஷுவல்ஸ் மற்றும் கௌரா ஹரியின் இசை, படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. கதை சொல்லும் விதம் எப்போதெல்லாம் தொய்வடைகிறதோ, அப்போதெல்லாம் இந்த தொழில்நுட்ப அம்சங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. தேஜா சஜ்ஜா மீண்டும் ஒருமுறை தனது நடிப்பால் ஈர்க்கிறார். மற்ற நடிகர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

 

ஹனுமான் படத்துடன் சில ஒற்றுமைகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், மிராய் ஒரு தனித்துவமான சினிமா அனுபவமாக நம் மனதில் நிற்கிறது. மொத்தத்தில், மிராய் நிச்சயம் பார்க்கத் தகுந்த ஒரு திரைப்படம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Mirai film

மேலும் சினி ஹப் என்ற ட்விட்டர் (எக்ஸ் தளம்) பக்கத்தில், "மிராய் திரைப்படம், அதிரடியான சண்டைக் காட்சிகளையும், நெகிழ்ச்சியான கதைக்களத்தையும் ஒருசேர இணைத்து, அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு சினிமா அற்புதமாக உருவெடுத்துள்ளது.

முதலில், இந்த படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரமிக்க வைக்கின்றன. 50-60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்தகைய தரமான காட்சிகளை உருவாக்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நமது புராண மற்றும் பாரம்பரிய அம்சங்களையும் இணைத்திருப்பது படத்திற்கு ஒரு புதுமையான பரிமாணத்தை அளிக்கிறது.

 

நடிகர் தேஜா சஜ்ஜா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பு திறனும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் அவரை அதிக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. படத்தின் திரைக்கதை மிகவும் கவனத்துடனும், துல்லியத்துடனும் எழுதப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும், அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை அது ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்தின் தீவிரத்தை மேலும் கூட்டுகிறது.

 

மொத்தத்தில், நீங்கள் அதிரடி படங்களின் ரசிகராக இருந்தாலும் சரி, அல்லது கதைக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்த திரைப்படம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரமேஷ் பாலா என்பவர், "படத்தின் இரண்டாம் பாதி, முதல் பாதியை விட இரு மடங்கு பிரம்மாண்டமானது. தேஜா சஜ்ஜா உணர்வுபூர்வமான காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். சண்டைக்காட்சிகள் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தன. ஹரி கௌராவின் பின்னணி இசை படத்தின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

குறிப்பாக, படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் திரையரங்குகள் ஆர்ப்பரிக்கும். மேலும், படத்தின் இறுதியில் வரும் ஆச்சரியம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

 

இயக்குனர் கார்த்திக்கின் கதை மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் அபாரமானது. படக்குழுவின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் பாராட்டுக்குரியது. படத்தில் வரும் கற்பனை கூறுகள் குழந்தைகளை நிச்சயம் கவர்ந்திழுக்கும்" என தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]