சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினம் என்று கூறினால் நம்மை சுற்றியுள்ள பெண் சாதனையாளர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா? சென்னையை சேர்ந்த ஒரு பெண் சாதனையாளர் தான் மதுமதி நாராயணன். இவர் இல்லத்தரசிகளுக்காக ஒரு தனி NGO நடத்தி வருகிறார். இதன் மூலம் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்களுக்கு டீசிங் பயிற்சி இலவசமாக கொடுத்து அவர்களுக்கு அருகில் உள்ள பால்வாடி அல்லது பிரைமரி பள்ளிகளில் வேலையும் வாங்கி தருகிறார்கள். அந்த வரிசையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஷ்ரத்தா மானு ட்ரஸ்ட் CEO மதுமதி நாராயணன் அவர்கள் நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
women empowerment (பெண்கள் அதிகாரம்) இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
women empowerment என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்களுக்கு அதிகாரம் அத யாரு கொடுக்க வேண்டும்? யாரும் கொடுக்கணும் அப்படிங்கறது இல்ல. அது வந்து எல்லா பெண்களுக்குமே இயல்பாகவே இருக்குது. ஒருத்தன் கிட்ட ஒரு விஷயம் இல்லனா தான் அத நம்ம கொடுக்க முடியும். ஆனா அவங்க கிட்டயே இருக்கிறத நம்ம வெளியில் கொண்டு வந்தா போதும் அவ்வளவுதான். இந்த காலத்தில் பெண்களுக்கு நிறைய தெரியாம இருக்குது. அவங்களுக்கு நம்ம தெரிய வச்சிட்டா போதும் அதுக்கு மேல அவங்களே பாத்துப்பாங்க.
உங்களுக்கு எப்படி இந்த NGO ஆரம்பிக்கணும்னு தோணுச்சு?
எங்க வீட்ல ஒரு பொண்ணு வேலை பார்த்தாங்க, அவங்க ஒரு நாள் வேலையெல்லாம் முடிந்த உடனே டைம்ஸ் ஆப் இந்தியா இங்கிலீஷ் பேப்பரை எடுத்து படிச்சிட்டு இருந்தாங்க. அப்போ நான் தாத்தாவோட தினமலர் பேப்பர் இருக்கு அதை எடுத்து படிங்க அப்படின்னு சொன்னேன். அவங்க இல்லம்மா எனக்கு இங்கிலீஷ் நல்லாவே படிக்க தெரியும். நான் எம்.ஏ முடிச்சிருக்கேன் அப்படின்னு சொன்னாங்க. எம்.ஏ முடிச்சுட்டு எதுக்குமா இந்த வேலைக்கு வந்தீங்க அப்படின்னு கேட்கும் போது எனக்கு வயசு 35 ஆகுது குழந்தைங்க இருக்காங்க நான் வேலைக்கு போனா பசங்கள பாத்துக்கணும் வீட்ட பாத்துக்கணும் இதுக்கு மேல அரசாங்க வேலைக்கும் தயார் ஆக முடியாது. அதனால எங்க அம்மா இந்த வீட்டு வேலையை பார்ப்பதை நான் பார்த்து இருக்கேன். இந்த வேலைய முடிச்சுட்டு குழந்தைங்க பள்ளி விட்டு வந்ததும் அவங்களையும் கவனிக்க முடியும். அதனாலதான் இந்த வேலைக்கு வந்து இருக்கேன் அம்மா. எனக்கும் வேலை பார்க்கணும் என் குழந்தைகளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கணும் எனக்கு பிடிச்சதையும் நான் வாங்கிக்கணும் என்று ஆசை. எனக்கு எதுவும் தேவை என்றால் கூட என் கணவர் கிட்டே போயி கேக்குற நிலைமை இருக்குது அப்படின்னு அந்த பொண்ணு சொன்ன பிறகு தான் நாம ஏன் இப்படி இருக்கிற பொண்ணுங்களுக்காக ஒரு முயற்சி எடுக்கக் கூடாது அப்படின்னு ஷ்ரத்தா மானு ஆரம்பித்தேன்.
இது யாருக்கெல்லாம் பயனளிக்கும் அப்படின்னு தொடங்குனீங்க?
நிறைய கஷ்டப்படுற குழந்தைங்க, வீதியில் படிக்கிறவங்க நமக்கு எளிமையா கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் அவங்களுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு கிடைக்கும். அந்த மாதிரி நிறைய குழந்தைங்க நல்ல திறமை இருந்தும் படிக்க முடியாமல் போயிடறாங்க அப்படி இருக்கிறவங்க ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் இதுதான் நம்மளோட குறிக்கோள். கஷ்டப்படுற பொண்ணுங்க குழந்தைகளை பார்த்துகிட்டு வேலைக்கு போகணும் அப்படின்னு நிறைய கனவுகளோடு காத்து இருக்க பொண்ணுங்க, இந்த மாதிரி பொண்ணுங்கள தேடி போயி பயிற்சி கொடுக்கிறோம். இவங்க ஒரு மூணு மணி நேரம் பக்கத்துல இருக்குற பள்ளிக்கு சென்று பாடம் எடுத்துட்டு வந்தா போதும் நம்ம ஒரு தொகையை சம்பளமா கொடுக்கிறோம். இதுக்கு அடிப்படை பட்டப்படிப்பு முடிச்சு இருந்தா போதும்.
எதற்காக ஆசிரியை பணியை தேர்வு செய்தீர்கள்?
ஆசிரியர் பணி எப்போதுமே நிலையானது. அதுலயும் ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாம விதைக்கிற விதையானது காலம் முழுவதும் நிலையாக இருக்கும். அதுக்காக தான் ஆசிரியர் பணிய தேர்ந்தெடுத்தோம்.
நீங்க நிறைய பேர பார்த்திருப்பீங்க அதுல யாரோட வாழ்க்கை உங்களுக்கு மறக்க முடியாததா இருந்தது?
நிறைய பேர் இருக்காங்க. அதுல ஒருத்தவங்க இப்போ சொன்னது, அவங்க கணவர் எலக்ட்ரிஷின்னா வேலை பாக்குறாங்க அவர் ஸ்டார் ஹோட்டல்ல எலக்ட்ரீசியன் வேலை பார்க்க போவாங்க யார் வந்து கேட்டாலும் எலக்ட்ரிஷன் வீடு அங்க இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க, எனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாமலே போயிருந்தது ஆனால் எங்க பவுண்டேஷன் மூலம் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு மீட்டிங் நடத்தி இருந்தோம். அப்போ அந்த டீச்சர் அவங்க கணவன் எலக்ட்ரிஷன் இருக்கிறாங்க அவங்களையும் அழைத்து வந்து அவங்க கணவர் ஸ்டார் ஹோட்டல்ல பின்னாடி வேலை பாக்குறாரு ஆனா இவங்க மேடையில் உட்கார்ந்து இருந்தாங்க. அப்போ அந்த டீச்சருக்கு அப்படி ஒரு சந்தோஷம். இப்போ யாராச்சும் எங்க வீட்டை தேடி வந்தாலும் தீபா டீச்சர் வீடு அந்தா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. எலக்ட்ரிஷன் வீடு அப்படின்னு சொல்றது இல்ல. இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்குனு ஒரு அடையாளம் வந்திருச்சு அப்படின்னு ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க. இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இன்னும் ஐந்து வருடத்தில் உங்களுடைய இலக்கு என்ன?
நாங்க பயிற்சி கொடுக்கும் பெண்கள் வந்து படிக்கிறாங்க, ஸ்கூலுக்கு வேலைக்கு போறாங்க அப்படின்னு சொல்றதை விட அவங்களே ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும் அதுதான் எங்கள் இலக்கு. நாங்க இந்த வருடத்தில் கல்வி சக்தி அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் நடத்த போறோம். அது மூலம் அவங்க வீட்ல இருந்து பாடம் எடுக்க முடியும். அவங்க வீட்டு பக்கத்துல இருக்கிற ஒரு மாணவர்கள் கிட்ட பணம் வாங்கி கற்றுக் கொடுத்தால் அதே மாதிரி பக்கத்து வீட்டில் உள்ள ஏழையான மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் இந்த மாதிரி ஐந்து வருடத்தில் ஆயிரம் பெண்கள் ஆசிரியராக உருவாக்கினால் இதில் 5000 ஏழை குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது குடும்பமா சமூகமா?
பெண்களோட முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இரண்டுமே தான். குழந்தைங்க பள்ளிக்கு சென்று வந்த பின்னாடி அவங்களை யார் பார்த்துப்பாங்க அப்படின்னு கவலை இருக்கு. வேலைக்கு போனா அவங்க தப்பா பேசிடுவாங்க இவங்க தப்பா பேசிடுவாங்க அப்படின்னு யோசிக்கிறாங்க. ஏனென்றால் இதுதான் 80% பெண்கள் காரணமா சொல்றாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் யாரோட உதவியும் இல்லாம இருக்கணும் அப்படின்னு நினைச்சாங்க. வானம் வசப்படும் தூரம் தான் நம்ம மனசு வச்சா நடக்காதது எதுவும் இல்லை. நாம முதலில் தயாரா இருக்கணும் அப்புறம் எல்லாம் தானா வரும். உங்கள் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கணும் அவ்வளவுதான்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation