பிக் பாஸ் வீட்டில் கிடைத்த பிக் சான்ஸ். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்டுகளுக்கு ஹேப்பியான செய்தி என்றால் நோ எவிக்சன் என்று ஆண்டவர் சொன்னதுதான்.
கடந்த வாரம் பாவா செல்லத்துரை உடனடியாகச் சென்றது இந்த வாரம் மாயாவை காப்பாற்ற வேண்டும் என்று நடைபெற்ற ஒரு போக்காக இருக்கின்றது. ஆகையால் யாரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.
விசித்ரா வில்லங்கம் இல்லாத வயதுக்கு ஏற்றத் தெளிவு எதையும் நேரடியாகக் கேட்கும் பாங்கு இவை அனைத்தும் சரியாகச் செய்கின்றார்.
யுகேந்திரன் யாரையும் புண்படுத்தாத எண்ணம், அன்பாலே அனைவரையும் அரவணைத்துச் செல்வது, எங்கும் எதிலும் ஒரு மென்மை தன்மை, இளம் வயதினருக்கு விட்டுக் கொடுக்கும் பாங்கு இவை அனைத்தும் யுகேந்திரன் ஒரு சிறந்த மனிதர் என்பதை நமக்குக் காட்டுகின்றது.
ஆண்டவர் கொஞ்சம் பயாசாக இருக்கிறாரோ என்று தோன்றுகின்றது. ஆம் மாயாவை மட்டுமே அவர் டார்கெட் செய்தார் மற்றும் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விக்ரம் சரவணனுக்கு தகுந்த அனுபவமோ வயது இல்லை அப்படி இருக்க அவர் என்ன செய்வார், அவருக்கென்று எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனாலும் சிறப்பாகச் செயல்பட்ட விக்ரம் சரவணனை பாராட்டாமல் ஆண்டவர் அவரை வைத்துச் செய்தார். உண்மையில் இது சரியான போக்கு அல்ல என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
பிரதீப் பிக்பாஸ் வீட்டில் காப்பாற்றப்படுகின்றனர். அவருக்குக் கைதட்டல் வருகின்றது. இந்தக் கேமை சரியாகப் புரிந்து விளையாடுகிறார் என்று அவருக்கான பாராட்டுகளும் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டில் மாயாவை கிண்டலடிக்கின்றார். கைதட்டு அதிகமாக வருகின்றது. பிரதீப்புக்கு உங்கள் மனநிலை என்ன என்பதையும் கேட்கின்றார்.
மேலும் கடந்த வாரம் ஆரியமாலா டாஸ்கில் சிறப்பாகச் செயல்பட்ட போட்டியாளர்கள் நன்முறையில் நடைபெற்றது. அத்துடன் மட்டுமில்லாமல், பட்டும் படாமல் மணி மற்றும் ரவீனாவை போட்டியை உணர்ந்து நடக்கும் படி மறைமுகமாக எச்சரித்தார்.
காச்சு மூச்சு என்ற கத்திய விஷ்ணுவுக்கு இன்னும் கொஞ்சம் டோஸ் கொடுத்திருக்கலாம். மரியாதை தெரியாமல் நடந்த ஜோவிகாவிற்கு மண்டையில் உரைக்கும் படி பேசி இருக்கலாம். மேலும் வேலை செய்ய முடியவில்லை, அதை வைத்து ஸ்ட்ரைக் செய்தது சரியா என்று இன்னும் கொஞ்சம் வலிமையாக வெளிப்படுத்தி இருக்கலாம். கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணுவும் நட்பு என்பது சற்று நெருக்கமாகவே இருக்கின்றது. குல்லா போட்டுக் கொண்டிருந்தாலும் கூல் சுரேஷ் தனக்கான ஒரு நட்பையும் பிடித்துக் கொண்டிருக்கின்றார். மற்றும் பூர்ணிமா அக்ஷயா ஆகியோர் நன்கு கலந்து மற்றவருடன் பேச வேண்டும் என்று கமலஹாசன் எடுத்து வைத்திருக்கலாம்.
மேலும் படிக்க: பிக்பாஸ் வீட்டைப் பிரித்தாளும் பிரதீப் பசியில் அலறிய பிக் பாஸ் வீடு
எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபின்பு விஷ்ணு ஜோவிகா உரையாடல் விஷ்ணு ஜோதிகாவிடம் சரியாகப் பேச வேண்டும் என்று எடுத்துச் சொல்ல, அதனைத் தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் ஜோவிகா. இனிமேலாவது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் யாரை நாமினேஷன் திங்கட்கிழமை செய்வது என்று விசித்திரா யுகேந்திரன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுவாரசியமாக நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 கமலஹாசன் முழுமையாகப் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் நடக்கும் சரவெடி டாஸ்க்குகள் ஜெயிலுக்கு போன வினுஷா அக்ஷ்யா
விளையாட்டு விளையாட்டாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் போட்டியாளர்களும் தங்களுடைய இலக்குகளைச் சரியாக வைத்து விளையாட வேண்டும். பூர்ணிமா மாயாவுடன் செய்யப் போவது என்று பேசுவதெல்லாம் சரியான முக்கியமாகத் தெரியவில்லை. தனித்தனியாக விளையாட வந்து ஒன்றாக விளையாடுவது என்பது ஒருவகையில் ஓகே என்றாலும் விளையாட்டுக்கு அது செட் ஆகாது இதை உணர்ந்து ஹவுஸ் மேட்ஸ் தனித்தனியாக விளையாட வேண்டும். பிரதீப்பை எல்லாரும் காபி செய்தால் நன்றாக இருக்கும் பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று அடுத்த வாரம் நிச்சயம் தெரியும்.
Image source : Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation