பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டது முதல் வாரத்திலே போட்டியாளர்களிடையே கடும் விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. அதற்குக் கமலஹாசன் வார இறுதியில் வச்சு செய்தார் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கங்கள் கொடுத்து வந்தார். கடந்த வாரத்தில் விஷித்ரா மற்றும் ஜோவிகா படிப்பு பேச்சுக்கள் அத்துடன் எழுத்தாளர் பாவா செல்லதுரை கதை மாயா மற்றும் விஷ்ணு, விஜய், கூல் சுரேஷ் ஏற்பட்ட மோதல்கள் என எல்லாம் முடிந்தது.
இந்த வாரம் ஆரம்பத்தை விட்டது பிக்பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகளும் இரண்டு வீடு என்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அனன்யா வெளியேறினார். மேலும் நாமினேஷனில் விஷ்ணு, மாயா, அக்ஷ்யா, கூல் சுரேஷ், விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி போன்றவர்கள் பெயர்களும் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் இந்த வாரம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எதைச் செய்தாலும் தெளிவுடன் செய்ய வேண்டும்.
பிக்பாஸ் சீசன் 7 இந்த வாரம் பிக்பாஸ் சுவாரசியம் குறைவாக உள்ள கேண்டிடேட்டுகளில் வினுஷா, அக்ஷ்யா இருவரையும் ஜெயிலுக்கு பிக்பாஸ் அனுப்பியுள்ளார். மேலும் நாமிநேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களைச் சுமால் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றார்.
அக்ஷ்யா ஜெயிலுக்கு செல்லுமாறு பிக்பாஸ் அறிவுறுத்த கேமரா முன்பு கண்ணீர் விட்டபடி செல்கிறார். அக்ஷயா உடன் வினிஷாவும் செல்கின்றார்.
மேலும் படிக்க:பிக்பாஸ் சீசன் 7 விடாபிடியாக நிக்கும் மாயா விழுந்துருவாங்களா ஹவுஸ்மேட்
பிக்பாஸ் இந்த வாரம் கேப்டன்சி பொறுப்பில் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஷ்ணு படும் கில்லாடியாக இருக்கிறார். சரவணனை மொக்கை செய்கின்றார். பிக்பாஸ் வீட்டில் ஒற்றுமை இல்லை, ஆளாளுக்கு கொடிப்பிடிக்க தொடங்கிவிட்டனர். தனிக்குழுவாக மாறச் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பேசிக்கொள்கின்றனர். உணவு சமைப்பதில் தேவைப்படும் உணவைச் சாப்பிடுவதில் கெடுபிடிகள் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. எதிர்பாராத டாஸ்குகள் ஏமாற்றம் மிகுந்த நடவடிக்கைகள் என எல்லாம் சேர்ந்து நம்மை என்ஜாய் செய்ய வைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இன்று நடத்தப்பட்ட புதிய டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் யார் அதிகமாக மக்களை என்டர்டைன்மெண்ட் செய்தனர் என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைத் தெரிவித்தனர். அதில் மாயா அதிகமான காசிப் செய்துள்ளார் என்றார். யூகி சண்டையிட்டு நான் பொழுதுபோக்க விரும்பவில்லை என்றார். இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பைத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 வெளியேறத் துடிக்கும் இருவர்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation