பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் கடந்த வாரம் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்புகுறித்த வாதம் நடைபெற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சீசன் 7 தொடங்கிய நாள் முதல் போட்டியில் நறுக்கு, நறுக்கு என்ற கேள்வியும், நான் தான் பெருசு என்ற பதில்களும் பிரபல போட்டியாளர்களிடையே நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த முறை பிக்பாஸ் 7 கன்ஃபெசன் ரூமில் பேசியுள்ளனர்.
கடந்தவாரம் கேப்டன்சி எப்படியிருந்தது என ஹவுஸ் மேட்ஸ் விலக்கியிருந்தனர். விஜய் வர்மா செயல்பாட்டுக்கு ஸ்டிரைக் கொடுத்துக் கண்டிக்கவும் செய்தார் ஆண்டவர் கமல். ஹவுஸ்மேட்களுக்கிடையே கேப்டன்சி குறித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தார் விஜய் வர்மா.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் தொடர முடியாது என்று பவா செல்லதுரை மற்றும் நடிகை மாயா கிருஷ்ணன் பேசி இருக்கின்றனர். மாயாகிருஷ்ணனுக்கு புத்திமதி சொல்லி இந்த நிகழ்ச்சியில் சஷ்டெயின் செய்வது குறித்து விளக்கம் கொடுத்து மனதை மாற்றியிருக்கின்றனர். ஆனால் பவா செல்லதுரை என்ன சொன்னாலும் கேட்காமல் தனக்கு சுகர் இருக்கின்றது. மருந்து மாத்திரைகள் உணவு சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்துத் தான் விலகப் போவதாகத் தெரிவித்து இருக்கின்றார். அவர் அந்த முடிவில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை விளையாட்டை விளையாட்டாகத் தான் விளையாட வேண்டும். தனது உடல் நிலைக்கு அவ்வாறு செய்தால் உடல்நிலையை பாதுகாக்க முடியாது என்று எழுத்தாளர் பவா செல்லதுரை தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் படிக்க:பிக்பாஸ் சீசன் 7 விடாபிடியாக நிக்கும் மாயா விழுந்துருவாங்களா ஹவுஸ்மேட்
ஜோவிகா படிப்புபற்றி விசித்திரா சொன்ன வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தியிருகின்றன. சாதாரண மக்களும் விசித்ரா பேசியதில் தவறு என்ன என்று பேசியுள்ளனர். கல்வி என்பது முக்கியம் அடிப்படை கல்வி என்பது அவசியமான ஒன்றாகும் என்று விசித்திரா விளக்கி இருக்கின்றார். விசித்திர கல்வி பற்றிப் பேசியது சரி என்பதை கமல் தெரிவித்து அவ்வாறே கல்வியை திணிப்பது தவறு என்பது பேசி மட்டும் படாமல் விலகிப் பேசி இருக்கின்றார்.
மேலும் படிக்க:சூடுபிடிக்கும் பிக்பாஸ் சுளுக்கு எடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation