படு கிளவராக விளையாட முயற்சி செய்யும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள், ஆளுக்கு ஒரு கொடியை நாட்டித் தங்களை வெளிச்சத்தில் கொண்டு வர மல்லுக்கு நிற்கிறார்கள், என்பதை அவர்களுடைய பேச்சுக்களும் ஆட்டிட்டியூடும் தெரிவிக்கின்றது.
சும்மா இருக்கற சங்கை ஊதி கெடுக்கும் மாயா
மாயா ஸ்டேண்டிங் காமெடி செய்து பின்பு விக்ரம் போன்ற படங்களில் ஒரு சிறிய பாத்திரங்களில் நடித்துத் தனக்கான அங்கீகாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அவருக்குப் பிக்பாஸ் ஒரு பெரும் வாய்ப்பு என்றே சொல்லலாம். அப்படி இருக்க அதனைக் கிளவராக அவர் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்.
ஏன் என்னை அப்பிடி பாக்குறீங்க என அதிர கேக்கும் மாயா
தேடிப்பிடித்து கூல் சுரேஷிடம் அவர் மல்லுக்கட்டிப் பேசிக் கொண்டிருக்க, இடையில் விஷ்ணு பகடைக்காயாகி கடைசியில் விஷ்ணுவுக்கும் மாயாவுக்கும் இடையே பேச்சு முட்டுகிறது. இதனால் விஷ்ணு வெளிப்படையாகப் பேசி வருகிறார். தனக்கு மதிப்பு இல்லை தனது பேச்சினை எடுத்துக் கொள்ளவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மாயா விலகிச் செல்கிறார். இது சரியான போக்கு அல்ல என்பதை தெளிவாக விஷ்ணு விளக்கிகிறார். அதையும் டோண்ட் கேர் என மாயா சொல்லி விளகுகிறார்.
நோ யுவர் ஹவுஸ் இமேஜ் டாஸ்கில் மாயா அழகாகத் தன்னை தன் புகழையும் தான் பிரபலமானவர் என்பதையும் விஷ்ணுவுடன் போட்டியிட்டு விளக்குகின்றார். அந்த இடத்தில் விஷ்ணுவும் சரியான தொடக்கம் கொடுத்துப் பின்பு மாயாவின் பேச்சுகளால் வீணாக எமோஷனலாகி மாயா பிரதீப் ஆண்டனியை மதிக்காமல் சென்றது போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டி பேச வேண்டிய டாஸ்க் தலைப்புகளிலிருந்து விலகிப் பேசுகிறார். இதனால் எளிதாக இவர் தடம் புரள்கிறார். அடுத்தபடியாக மாயா வெரிஃபைட் வாங்கி வெற்றிகரமாகத் நடை போடுகிறார். மாயா தெளிவாகச் செயல்படுகின்றார் என்பது தனியாகவே நமக்குத் தெரிகின்றது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation