Bigboss season 7 strike update: பிக்பாஸ் வீட்டை பிரித்தாளும் பிரதீப் பசியில் அலறிய பிக் பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் ஸ்டிரைக் செய்யும் சுமால் பாஸ் வீட்டினர் வாதம் செய்யும் ஹவுஸ்மேட்ஸ் 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-13, 15:02 IST
hungry

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் நம்மைக் கதிகலங்க செய்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல, பிக்பாஸ் வீட்டில் சமைப்பதற்கு தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் விருப்பமின்மை குறை கூறல் ஆகியவை பெரும் பிரச்சனையை உண்டு செய்திருக்கின்றன.

சரவணன் கேப்டன்சி பதவியிலிருந்து இதனைச் சரி செய்யக் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளார். பிரதீபிடம் தெளிவாக விளக்கியும் பிரதீப் தான் சரி என்பதை போல் மிகுந்த மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். இது ஒரு கேம் என்று தன்னைத்தானே மாறு தட்டிக் கொள்கிறார். இது உண்மையில் எரிச்சலை தருகிறது. என்னதான் பிரச்சனை என்றாலும் நமது வீட்டில் இருப்பவர்களைப் பட்டினி போட நாமே விரும்பமாட்டோம். அப்படி இருக்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள போட்டியாளர்கள் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து அவரவருக்குத் தெரிந்த முறைப்படி நடந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் நடக்கும் சரவெடி டாஸ்க்குகள் ஜெயிலுக்கு போன வினுஷா அக்ஷ்யா

யார் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் இல்லை. விசித்திரா தேவைப்பட்ட இடத்தில் பேசிப் பார்த்தார். ஆனால் யாருடைய அட்வைஸும் தேவையில்லையெனப் பில்டப் பிரதீப் பேசினார். இது ஒரு பக்கம் கடுப்பை கிளப்பி இருக்கின்றது. ‘ஆடியன்ஸ் எங்கடா இவன், ஏன்டா இவன் என்கின்ற மாதிரி முணுமுணுத்துக்’ கொள்கின்றனர். ஜோவிகா சாப்பாடு வீன் செய்வது எங்கள் விருப்பம், சமைத்து போடுவது உனது கடமை அதைச் செய்வதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டிற்கு நீ வந்திருக்கிறாய் என்பதை தெரிவித்தார். அதற்குப் பிரதீப் நாங்கள் அடிமைகள் அல்ல எங்களுக்கு ஒரு வேலையால் தேவை எங்களால் பாத்திரங்கள் கழுவ முடியவில்லை என்ற மொக்கை காரணத்தைக் காட்டி வீட்டில் உள்ள மற்றவர்களைப் பசியில் தள்ளிப் பாடாய்படுத்தியிருக்கின்றனர்.

விஷ்ணு சிறிது கூடப் பொறுமையின்றி ஏனோதானோ எனச் செயல்படுகின்றார். இது உண்மையில் ஆரோக்கியமான போக்கு அல்ல இது ஒரு கேம் என்பதை மறந்து நடந்து கொள்கின்றனர். இவர்கள் உண்மையிலேயே மனிதர்கள் தானா என்ற சந்தேகம் சாமானியன் மத்தியில் சரவெடியாய் வெடிக்கின்றது. வயது வித்தியாசங்கள் எதுவும் பார்க்காமல் வாடாப் போடா என்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஜோவிகா இதனை யார் அவருக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

விசித்திரா சரியான நேரத்தில் சரியான கேள்விகளைக் கேட்டு இருக்கின்றார். நாங்கள் போன வாரம் சமைத்துப்போட்டோம். அப்போது அனைத்து வேலைகளையும் நாங்கள் தானே செய்தோம் என்று தெரிவித்திருந்தார். அதற்கு எந்தப் பதிலும் பிரதிப் சைடுல இருந்து வரவில்லை. மேலும் யார் சரியாகப் பேசுகிறார்களோ அவருக்குப் பதில் சொல்லாத போக்கினை பிரதீப் பின்பற்றுகிறார். கேப்டன் என்பதற்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பதை பிரதீப் மறந்து செயல்படுகின்றனர். இப்படியொரு இக்கட்டான நிலைமையில் பிக்பாஸ் வீடு போர்க்களமாய் தெரிகின்றது. உருளைக்கிழங்கு தோல் உரிக்கவில்லை, காரமாக இருக்கின்றது. ஒரு சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி பேசி அமர்க்களம் செய்கின்றார். மாயா மற்றும் விஷ்ணு அமைதியாக இருந்தால் சரி வராது என்று இருக்க, தன் பங்கிற்கு அக்ஷயா வேறு பேசத் தொடங்கிவிட்டார். பத்தாக்குறைக்கு பில்டப் பிரதீப் நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று அடிக்கடி சினிமா டயலாக்குகளை பேசிக் ஆடியன்ஸ் வெறுப்பைத் தூண்டுகிறார்.

ஆ, உ என்ற கத்தும் கூல் சுரேஷ் இதற்கு எந்தப் பதிலும் தரவில்லை. பிக் பாஸ் வீட்டில் பசியுடன் ஸ்நாக்ஸ் செய்வது மட்டும் வைத்து அந்தப் பொழுதைப் போக்குகின்றனர். சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் சாப்பிடுகின்றனர். இதற்குப் பிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்ப்பும் கிளம்புகின்றது. சுமால் பாஸ் வீட்டில் அனைவரும் சாப்பிடுகின்றனர். கமல் சார் வந்தாலும் நான் சாப்பிட மாட்டேன் என்று பிரதீப் வாயாடுகிறார். இது ஆரோக்கியமானது அல்ல, எரிச்சல் ஊட்டும் பேச்சாக இருக்கின்றது. இதனால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். யுகேந்திரன் இந்நிலைமையைச் சமாளிக்க பேசிப் பார்க்கின்றார் ஆனால் எதுவும் எடுபடவில்லை.

பூர்ணிமா கூல் சுரேஷ் செய்து கொடுக்கும் தோசை சாப்பிடும்போது குட்டி கதை ஓடியது அதை அப்படியே திருப்பிப் போட்டுப் பூர்ணிமா திருடன், நீதிபதி கதையின் சுரேஷிடம் 'நீங்கள் ஏன் திருடன் பட்டத்தை வாங்குனீர்கள்' என்று கேட்கிறார். அப்போது அதனை மிகவும் கூலாக ஹேண்டில் செய்து இந்த உலகமே ஒரு நாடகம் மேடை என்று அழகாகக் கூல் சுரேஷ் பேச்சிலிருந்து நகர்ந்து கொள்கின்றார்.

மேலும் படிக்க:அனல்பறக்கும் விவாதங்கள் பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் அடக்கிவாசிக்கும் ஒரு சிலர்

ஒரு கட்டத்தில் பசி தலைவலியுடன் ஜோவிகா முனுமுனுக்க பாவம் என்று அவரிடம் விசாரிக்கின்றார் விசித்திரா. என்னவாக இருந்தாலும் ஒரு தாய் மனது தானே இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று இருக்கின்றது. வயது என்பது அனுபவம் என்பது வேறு வேறு எதையும் எடுத்தோம் கௌத்தோம் என்று செயல்பட்டால் வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு இந்தப் பிக் பாஸ் வீட்டில் இன்றைய நடவடிக்கைகள் பெரும் உதாரணமாகும்.

octo th

எந்த வேலையும் செய்யச் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தயங்கினார்கள் ஆனால் கடந்த வாரம் அனைத்து தேவைகளையும் சரி செய்து சமைத்தும் கொடுத்தனர். இதனை உணர தற்போதைய ஸ்மால் பாகஸ் வீட்டில் இருப்பவர்கள் மறுக்கின்றனர். இதுவே பிரச்சனைக்கு ஆரம்பம் என்று சொல்லப்படுகின்றது. மாயா, விஷ்ணு, பிரதீப் மூவரும் மூடர் கூடங்களாக இருக்கின்றனர். மனிதாபிமானம் என்பது இல்லாமல் தேவையற்ற ஸ்ட்ரைக் செய்து இருப்பவர்களைப் பசியில் வாட வைக்கின்றனர்.

Imgae Source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP