BIg boss Season 7 bites : அனல்பறக்கும் விவாதங்கள் பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் அடக்கிவாசிக்கும் ஒரு சிலர்

பிக்பாஸ் சீசன் 7 ஹவுஸ்மேட்டுகளுக்கிடையே யார் புத்திசாலி என்ற அறிவிக்கப்படாத போட்டி காணப்படுகிறது

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-12, 09:21 IST
husma

பிக்பாஸ் வீட்டில் புதியதொரு டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. பிக்பாஸ் வீட்டைப் பொருத்தமட்டில் ஜோவிகா ஹைலைட்டாக இருப்பதால் மாயா படும் வில்லியாகப் பிளான் செய்து காயை நகர்த்துகிறார். பூர்ணிமாவும் ஜோவிகாவை பார்த்து அதிக சப்போர்ட் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக அதாவது தனி கேங்க் உருவாக்குவது எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கமாக நகர்கின்றது

பில்டப் கொடுத்துத் தான் பெரிய ஆள் என்று ஹைலைட் செய்யும் பிரதீப் நிக்சனுடன் சண்டை செய்கின்றார். அவரைத் தூண்டிவிடுகின்றார் இதன் காரணமாகக் கொதித்து எழுந்த நிக்சன் ‘என்னைக் குறை சொல்ல உனக்கு என்ன அருகதை’ இருக்கின்றது, நான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்து மிகுந்த நொந்து போகின்றார். வருத்தம் அடைகின்றார். பிரதீப் ‘நீ ஒரு வீரன் இல்லை ‘என்று விளையாடத் தகுதி இல்லையெனவும் வெறுப்பை உண்டாக்குகின்றார்.

ரவீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டம் நடைபெற்றது. மணி நெருங்கிய நண்பராக இருந்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் விசித்ரா, யூகியிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியாகின்றார். பிக்பாஸ் வீட்டில் ரவீனா பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

பிக்பாஸ் வீட்டில் தினசரி பரபரப்பு அதிகமாக இருக்கும். பிரதீப் ஆண்டனி தான் ஒரு சிறந்த அறிவாளி என்று பில்டப் கொடுத்து அந்த வீட்டில் செயல்படுவது வழக்கமாக வைத்துள்ளார். தனக்கு என்று ஒரு பாணியை வைத்துப் கூட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றார். அவர்களிடம் நன்கு பேசக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் பேசப்படும் பொருளாகப் பிரதீப் ஒரு வியூகத்துடன் செயல்படுகின்றார், என்பதை அனைவரும் கவனித்து வருகின்றனர். அந்த வகையில் நிக்சனிடம் சண்டையிட்டு அவரைத் தூண்டிவிட்டு பேச வைத்துள்ளார். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற போர்வையில் தெரிகின்றார்.vetri

சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒரு அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். அதனையே மாயா கிளவராகப் பேசுகின்றார். அது மட்டுமல்ல டாஸ்க் நடைபெற்ற இடத்தில் சீன் போட்டுப் பேசிய மாயா இதற்கிடையில் விஷ்ணு தனி கோல் போடுகின்றார். பிக்பாஸ் வீட்டில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.

ரவீனா பிறந்தநாள் மற்றும் மணி இருவரும் நட்புடன் நெருங்கிப் பழகுவதை பார்த்து விசித்ரா இருவரும் காதலிக்கிறீர்களா, என்று கேட்கின்றார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர். யுகேந்திரன் நிக்சனுக்கு அமைதியாக இருக்கவும் கவலைகளை விடவும் அறிவுரைக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க:பிக்பாஸ் சீசன் 7 விடாபிடியாக நிக்கும் மாயா விழுந்துருவாங்களா ஹவுஸ்மேட்

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக நன்நடத்தையுடன் இருப்பது யுகேந்திரர் மட்டுமே. டாஸ்க்குகளை கட்சிதமாகக் கையாள்கிறார். ஜோவிகா படிப்புகுறித்து எங்குப் பேசினாலும் முறையாகக் கையால்கின்றார்.Image source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP