ரோபோ சங்கர் நடித்த படங்களில், அவர் பெயர் சொல்லும் அளவிற்கு தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றால் படைத்தவர். சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதில் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கள். அதன் பின்னர், அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், அங்கு திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைந்தாலும் அவர் பெயரை என்று சொல்லும் அளவிற்கு அவர் நடித்த 5 படங்களை பார்க்கலாம்.
விஜய் சேதுபதி நடிப்பில் சிறிய பட்ஜெட் படமாக வெளியான ”இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பசுபதிக்கு அடியாளாக ரோபோ சங்கர் நடித்திருப்பார். சிறிய கதாப்பத்திரமாக இருந்தாலும் அவரது நடிப்பால் நெஞ்சில் நீங்காத நகைச்சுவையை வெளிப்படுத்திருபார். குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருக்கும் பசுபதிக்கு, மத்திரை போடவேண்டும் என்று சொல்லும் வேலையில், அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அனைவராலும் இன்றும் பேசப்படுகிறது.
விஜய் நடிப்பில் புதுவிதமாக வெளியான படம்தான் புலி. இந்த படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ரோபோ சங்கர் நகைச்சுவை யாராலும் பேசாமல் இருக்க முடியாது. கதாநாயகியைத் தேடிப்போகும் விஜய்க்குத் துணையாக சிறிய மனிதராக ரோபோ சங்கர் நடித்திருப்பார். “ஆல்பா” என்ற கதாப்பத்திரத்தில் அட்டகாசமாக இவரது நகைச்சுவையை வெளிப்படுவதிருப்பார்.
மேலும் படிக்க: விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்; வைரலாகும் புகைப்படங்கள்
மாரி படத்தில் தனுஷ் நடிப்பிற்குப் பிறகு, ரோபோ சங்கர் நடிப்பை பற்றி அனைவரும் பேசும் விதமாக நடித்திருப்பார். இந்த படத்தில் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனுஷுடன் கடைசி வரையிலும் கூடவே வரக்கூடிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் நடிப்பை கண்ட பிறகு பல திரைப்படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் கடைசி காட்சி வரையிலும் வரக்கூடிய முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். தந்தை, மகள் பாசத்தை வெளிப்படுத்தும் எமோஷனல் காட்சிகளில் இவர் வெளிப்படுத்தும் நகைச்சுவை காட்சிகள் அனைவராலும் பராட்டப்பட்டது. இந்த படத்தில் நகைச்சுவையுடன் தனக்கு அக்ஷனும் பண்ண தெரியும் என்பதை காட்டியிருப்பார் ரோபோ சங்கர்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் அறிவழகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கொலைக்கார குப்பத்தைச் சேர்ந்த இவர் சமூகத்தை மேம்பத்தும் விதமாக குப்பம் FM 90.8 என்ற உள்ளூர் வானொலி நிலையத்தை நடத்திக்கொண்டு இருப்பார். இவருக்கு உதவும் விதமாக ரோபோ சங்கரும் உடன் இருப்பார். சிவாவும், ரோபோவும் இணைந்து வெளிப்படுத்தும் நகைச்சுவைகள் அனைவராலும் பேசப்பட்டது.
மேலும் படிக்க: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்!
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]