herzindagi
image

Vishal Engagement : விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்; வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலுக்கு நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
Editorial
Updated:- 2025-08-29, 14:53 IST

சினிமா பிரபலங்களுக்கும் கிசு கிசுகளுக்கும் பஞ்சமே இல்லை. யார் யாரை காதலிக்கிறார்? யாரை திருமணம் செய்யப்போகிறார்? என அவரவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக நடிகர் விஷால் குறித்து எத்தனையோ? விமர்சனங்கள் வந்திருந்தாலும், அதை எதையும் பொருட்படுத்தவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் போது தான் தன்னுடைய கல்யாணம் என்று கூறிவந்த நிலையில், ஆகஸ்ட் 29 ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக கூறியிருந்தார்.

vishal

மேலும் படிக்க: Rashmika Mandanna : 'நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’! வைரலாகும்  ராஷ்மிகாவின் போலி வீடியோ.. குரல் கொடுக்கும் திரைப்பிரபலங்கள்..

தமிழ் திரையிலகினர் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் விஷாலுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தான் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஷாலுக்கு நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவீட்டார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.

 மேலும் படிக்க:  Jawan Actress Nayanthara : இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ செய்யும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?


என்னுடைய பிறந்த நாளில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களும் நன்றி என்றும், இந்நாளில் மிகவும் எளிமையாக சாய் தன்ஷிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என்ற தகவலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். சாய் தன்ஷிகா மற்றும் விஷால் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படங்கள் உள்பட நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து இணைய தள வாசிகள் பலரும் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

vishal engagement

 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாய் தன்ஷிகாவைக் காதலிப்பதாக அறிவித்திருந்தார். ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்படும் அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில் , தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ல் திருமணம் இல்லை என்றும், வேறொரு நல்ல செய்தி சொல்கிறேன் என தெரிவித்தார். அதன் படி இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

48 வயது ஆகிவிட்டது எப்போது திருமணம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]