
தீபாவளி வந்துட்டா சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. எப்போது தங்களது பிடித்த நடிகர்களின் படம் வெளியாகும் என காத்திருப்பார்கள். வீட்டிற்கு முன்னால் பட்டாசு வைக்கிறார்களோ? இல்லையோ? திரையரங்கு வாயிலின் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தாண்டு கொஞ்சம் வித்தியாசமாக ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். இருந்தப் போதும் தற்போது முன்னணி இளம் நடிகர்களின் படம் வெளியாகிறது. அப்படி என்னென்ன படங்கள்? என்பது குறித்து நாம் அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: Idli Kadai Movie: கிராமத்து வாழ்க்கையை எடுத்துரைக்கும் இட்லி கடை; குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் என விமர்சனம்!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வெளியாகவுள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். கபடி ஆடும் ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கும் கதைக்களமாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் எதார்த்தமான கதைக்களமாக அமையும் என்பதால் இத்திரைப்படம் நிச்சயம் அப்படியாகத்தான் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க: பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் குறித்து விரிவான பார்வை
கோமாளி, லவ் டுடே போன்ற படங்கள் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கராதன் நடிப்பில் டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கிய இப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஹிருது ஹரோன் ரோகினி, ஐஸ்வர்யா ஷர்மா போன்றவரகள் நடித்துள்ளார்கள். காதலை மையமாக வைத்து வெளியாகும் இத்திரைப்படம் நிச்சயம் இளம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பார்க்கிங், லப்பர் பந்து போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் டீசல் திரைப்படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது. புதுமுக இயக்குநர் ஷன்முகம் முத்துசாமி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கலந்தாக உள்ளது. இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பீர் சாங் பாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் ஹிட் அடித்துள்ளது.
மேலும் படிக்க: Vishwambhara glimpse: பிரம்மாண்டத்தின் உச்சம்; அதிரடி காட்டும் சிரஞ்சீவி: கவனம் ஈர்க்கும் விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ
ஆர். ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலந்த நண்பா திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சூர்யாவின் 45 வது திரைப்படமும் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]