herzindagi
image

அவல் வைத்து ருசியாக வடை செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

அவல், கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் போதும் சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த அவல் வடையை வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும்
Editorial
Updated:- 2025-09-24, 14:46 IST

வடை என்றாலே உளுந்து வடை, பருப்பு வடை, பஜ்ஜி, வெங்காய வடை போன்றவை தான் சட்டென்று அனைவரின் நினைவிற்கு வரும். இந்த வடைகளில் உளுந்து, கடலைப் பருப்பு, வெங்காயம் போன்றவைகள் சேர்க்கப்படும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற உதவுகிறது. இதற்கு மாற்றாக ஏதாவது வடை செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது அதீத ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அவல் வடையை ட்ரை பண்ணுங்க.

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு புலாவ்; சுலபமாக செய்யும் முறை உங்களுக்காக


அவல் வடைக்குத் தேவையான பொருட்கள்:

  • அவல் - 1 கப்
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • பச்சை மிளகாய் - 5
  • வெங்காயம் - 2
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 மேலும் படிக்க: காரசாரமாகவும் ருசியாகவும் மசால் பொடி செய்யணுமா? இந்த பொருட்களையெல்லாம் மறக்காமல் சேர்த்திடுங்க!

அவல் வடை செய்யும் முறை:

  • அவல் வடை செய்வதற்கு முதலில் அவலை நன்கு கழுவிய பின்னதாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • வடை செய்வதற்குத் தேவையான சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற வைத்த அவல், பொடி பொடியாக றறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு, சீரகம், அரை கப் கடலை மாவு போன்றவற்றையும் சேர்ந்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். வடை பதத்திற்கு உள்ளதா? என்பதைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அவல் வடை செய்வதற்குத் தேவையான மாவு தயார்.

  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் போதும். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த அவல் வடை ரெடி.
  • இனி உளுந்த வடை, பருப்பு வடை, பஜ்ஜி, வெங்காய வடையாக சாப்பிட்டு சளிப்பாக வேண்டும். சுவையோடு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அவல் வடையை மேற்கூறிய முறையில் செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். அதிலும் இந்த வடைக்கு சைடு டிஸ்ஸாக தேங்காய் சட்னி அல்லது கார சட்னி ஏதாவது வைத்து சாப்பிட்டுங்க. நிச்சயம் ருசி வேற லெவலில் இருக்கும். அப்புறம் என்ன? இனி உடனே உங்க குழந்தைகளுக்குச் செய்துக் கொடுங்க.

  மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா;  ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !

வியக்க வைக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அவல்:

வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற உடலுக்கு ஆற்றலை அளிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உணவு முறையில் பல வழிகளில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமான பிரச்சனை முதல் இதய ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பலவற்றிற்குப் பேருதவியாக உள்ளது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]