herzindagi
sunburn prevention big image

Sunburn Prevention: சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சூப்பரான 10 டீப்ஸ்

சூரிய ஒளியால் முகத்தில் சருமம் எரிச்சல் தன்மை இருந்தால், இந்தப் பிரச்சனைக்கு சமையலறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-04-03, 11:34 IST

வெயிலால் முகத்தில் கறைகள் மற்றும் அழகிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் யார் வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். சூரியனின் வலுவான கதிர்கள் சருமத்தில் பட்டு முகம் சேதமடைகிறது, குறிப்பாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும். இது உங்கள் சருமத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் ஏற்ப்பட்ட கருமைய அகற்றுவதும் எளிதானது அல்ல. அத்தகைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சிறிய விஷயங்கள் இந்த பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இன்று நங்கள் உங்களுக்கு 10 எளிய வீட்டு வைத்தியங்களைக் கூறுவோம் இது உங்களுக்கு வெயிலின் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.

 மேலும் படிக்க:  முடி வரண்டு கொத்து கொத்தாய் கொட்டுவதை தடுக்க வீட்டு சீரம்

sunburn inside

 

  • கோடை காலத்தில் முடிந்தவரை தண்ணீர் மற்றும் திரவங்களை உட்கொள்ள வேண்டும், இதனால் உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும் மற்றும் வறண்டு போகாது. 
  • சருமத்தை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். இதற்கு கற்றாழை ஜெல், தேங்காய் தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றை முகத்தில் டோனராக பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.
  • முல்தானி மெட்டி மற்றும் சந்தனத்தின் பேஸ்ட்டையும் சருமத்தில் தடவலாம். உங்கள் சருமம் வறண்டு இருந்தால், இந்த பேஸ்ட்டில் தேனையும் கலக்கவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முல்தானி மிட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
  • தினமும் சருமத்திற்கு தேன் தடவலாம். தேனில் ஈரப்பதம் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால் சருமத்தை உலர அனுமதிக்காது. மேலும் சருமத்தில் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
  • கோடைக் காலத்தில் தயிர் மற்றும் உளுத்தம்பருப்பு பொடியை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வரலாம். இரண்டுமே மிகச் சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர்கள் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த சருமத்தை அகற்றும் திறன் கொண்டது.
  • வெள்ளரிக்காய் சாற்றையும் முகத்தில் தடவ வரலாம். இதில் வைட்டமின் சி உள்ளதால் சரும கறைகளை குறைத்து, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. வெள்ளரிக்காய் சாற்றை தடவுவதால் சருமத்திற்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
  • வீட்டிலேயே ஐஸ் ஃபேஷியல் செய்யலாம். இது உங்களுக்கு வெயிலின் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருவதோடு, சருமத் துளைகளின் அளவும் சிறியதாகி, சருமத்தை இறுக்கமாக்கும்.

sunburn inside

  • உங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஒரு தக்காளியை எடுத்து முகத்தில் மெதுவாக தேய்க்கவும். இது சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.
  • நீங்கள் வெயில் பிரச்சனையை எதிர்கொண்டால் ஆரஞ்சு தோலை உலர்த்தி ஸ்க்ரப் தயார் செய்து, அதன் மூலம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இது இறந்த சருமத்தை நீக்குவது மட்டுமின்றி சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது.
  • தண்ணீரில் படிகாரத்தை சேர்த்து முகத்தை சுத்தம் செய்யலாம். படிகாரக் கரைசலில் சாதாரண தண்ணீரைச் சேர்த்த பின்னரே முகத்தைக் கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் தாக்கம் குறைவதுடன் முகம் பளபளக்கும்.

மேலும் படிக்க: வெயிலிலிருந்து முகத்தைப் பராமரிக்க ஐஸ் க்யூப் யூஸ் பண்ணிக்கோங்க!

  • பப்பாளியை ஃபேஸ் பேக் செய்து தடவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்களை காணலாம். பப்பாளியுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் செய்யலாம். 

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் ஷேர் செய்து லைக் செய்யுங்கள். இதே போன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும். 

Image Credit- freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]

Sunburn Prevention: சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சூப்பரான 10 டீப்ஸ் | ways to prevent sunburn on your skin in tamil | Herzindagi Tamil