herzindagi
ice cube facial tricks

வெயிலிலிருந்து முகத்தைப் பராமரிக்க ஐஸ் க்யூப் யூஸ் பண்ணிக்கோங்க!

<span style="text-align: justify;">&nbsp;ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக செல்வதால் முகத்தைப் பளபளப்பாக்க முடியும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-04-01, 16:45 IST

தமிழகத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலிருந்து முகத்தைப் பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. அதிலும் திருவிழாக்கள் போன்ற பண்டிகைக் காலங்களில் முகத்தை அழகாக்குவதற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் முகத்தின் அழகைக் கெடுத்துவிட்டது. இந்த சூழலில் நீங்கள் இயற்கையான முகத்திற்கு பொலிவைத் தர விரும்பினால் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம்.  அது எப்படி ஐஸ் கட்டிகள் முகத்தைப் பராமரிக்க உதவும் என்ன சந்தேகம் நிச்சயம் இருக்கும்? இதோ அதற்கான வழிமுறைகள் இங்கே..

ice cube facial trick

மேலும் படிக்க: வெளுத்து வாங்கும் வெயில்; தலைமுடியைப் பராமரிக்க கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது?

முகத்தைப் பொலிவாக்கும் ஐஸ் க்யூப் மசாஜ்:

  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் வாட்டி வதைத்தாலும் பணி நிமிர்த்தமாக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டோம். நாள முழுவதும் வெளியில் சுற்றித்திரிவதால் சருமத்தில் கருமைகள் படியக்கூடும். என்ன தான் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினாலும், சில மணி நேரத்திற்கு மட்டுமே இதன் அழகைப் பராமரிக்க முடியும். நிரந்தரமாக எவ்வித செலவும் இல்லாமல் அழகுப்படுத்த வேண்டும் என்றால் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யவும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீங்கி முகத்திற்குப் பொலிவைத் தரக்கூடும். இது முகத்தைப் பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கும்.
  • ஐஸ் க்யூப்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்க உதவும். வெளியில் சென்று வந்த பிறகு நீங்கள் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முகச்சுருக்கத்தைக் கட்டுப்படுத்தி, விரைவில் வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • அதிக நேரம் தூக்கம் இல்லாமை, வெயிலில் அதிக நேரம்  அலைவதால் கண்களுக்கு ஓய்வில்லாமல் இருப்பதால் கருவளைய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், கற்றாழை ஜெல்லை ஐஸ் க்யூப்களாகப் பயன்படுத்தவும். இதில் ஊட்டச்சத்துக்கள் கருவளைய பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் புதினா, எலுமிச்சை சாறு கொண்டு ஐஸ்க்யூப் தயாரிக்கவும். பின்னர் அதை வைத்து தொடர்ச்சியாக மசாஜ் செய்யும் போது கரும்புள்ளிகளை நீக்கவும், பருக்களைப் போக்கி முகத்தைப் பொலிவாக்கவும் உதவியாக உள்ளது.
  • தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பராமரிக்க உதவியாக இருக்கும் என்பதால் தக்காளி சாறு கொண்டு தயாரிக்கும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ice cubes facial types

 

மேலும் படிக்க: டீனேஜ் பெண்கள் சரும பாதுகாப்பிற்கு இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!

இவ்வாறு தொடர்ச்சியாக ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக முகத்தைப் பளபளப்பாக்க முடியும். இதோடு கடலை மாவு, பாசிப்பருப்பு, வேப்பிலை, மஞ்சள் கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பேஸ் பேக் செய்து முகத்திற்கு அப்ளை செய்யலாம்.

 Image source - google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]