ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலை விரும்புகிறார்கள், ஏனெனில் அது அவர்களின் தோற்றத்தையும் மற்றும் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. இருப்பினும் மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் காரணமாக பெரும்பாலோருக்கு அடர்த்தியான முடியை அடைவது கொஞ்சம் கடினமாகிவிடுகிறது. இதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த முடி தயாரிப்புகளை நம்பி பயன்படுத்துகிறோம், அவை முடியில் சில மோசமான சேதங்களை ஏற்படுத்துகின்றன. சிறந்த கூந்தலுக்கு மற்றும் நீண்ட, அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும் இயற்கை வைத்தியங்களை பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு வலிமை சேர்க்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் தலைமுடிக்கு மிகவும் தேவையான மென்மையை பெற முடியும். நீங்கள் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்பினால் சூடான ஆலிவ் எண்ணெயால் தலைமுடிக்கு மசாஜ் செய்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இரவில் ஆலிவ் எண்ணெயை மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலைமுடியை ஷாம்பு செய்தால் நல்ல பலன் பெறலாம்.
வைட்டமின் ஈ நிறைந்த ஆமணக்கு எண்ணெய் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. ஆமணக்கு எண்ணெய் தலைமுடியின் சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை சம பாகங்களாக கலந்து தடவி நன்றாக மசாஜ் செய்யலாம். ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும், நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற ஒவ்வொரு வாரமும் ஒரு முறை இதைத் தொடரவும்.
மேலும் படிக்க: இனி முடி வளர்ச்சி தாமதமாகாமல் வேகமான வளர இந்த எளிய வழிகளை பயன்படுத்துங்கள்
முடி பராமரிப்பைப் பொறுத்தவரை நெல்லிக்காய் மிகவும் பேசப்படும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக முடி வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு பெயர் பெற்றது. நீங்கள் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து வடிகட்டி பின்னர் இரவில் தடவலாம். இதை மறுநாள் காலையில் கழுவி வரவேண்டும், வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
தேனில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றும் பண்புகள் உள்ளதால் தலைமுடிக்கு சிறப்பாக செயல்படுகின்றன. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு தேக்கரண்டி தேனை ஷாம்பூவுடன் கலந்து தலைமுடியைக் கழுவ பயன்படுத்தலாம். தேன் தலைமுடியின் வேர்களில் இருந்து வலுப்படுத்த உதவுகிறது. இது தலைமுடிக்கு சேதம் விளைவிக்கும் அனைத்து ஃப்ரீ ரேடிக்கல்களையும் நீக்க உதவுகிறது.
இன்றைய நாட்களில் பெரும்பாலான வீடுகளில் கிடைக்கும் கறிவேப்பிலையில் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை கலந்து தடவி வந்தால் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை குறுகிய காலத்தில் பெறலாம். இதற்கு எண்ணெயை சூடாக்கி கறிவேப்பிலையைச் சேர்க்கவும். இலைகள் கருப்பாக மாறியதும், சுடரிலிருந்து அகற்றி, குளிர்வித்து சேமித்து வைத்து கொள்ளலாம். ஒரு மணி நேரம் தடவி பிறகு தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
மேலும் படிக்க: இந்த 2 பானங்களில் ஒன்றை தினமும் குடித்தால் முகம் மட்டுமல்ல கூந்தலும் பளபளப்பாக மாறும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]