பெண்கள் பொதுவாக நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நீளமான மற்றும் பட்டுப்போன்ற கூந்தல் பெண்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தருகிறது. இருப்பினும் அனைத்து பெண்களுக்கும் சிறந்த கூந்தல் கிடைப்பதில்லை. நீண்ட கூந்தல் விரும்பும் பெண்கள் உணவுப் பழக்கவழக்கங்கள் முதல் கூந்தல் பராமரிப்பு முறை வரை பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் இந்த குறிப்புகள் மூலம் எளிதாக அடைய முடியும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலைப் போலவே கூந்தல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கூந்தல் புரத சத்துக்கள் மூலம் வளரக்கூடியது, ஆகையால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க போதுமான புரதம் தேவை. கூந்தல் விரைவாகவும் நீளமாகவும் வளர விரும்பினால் தலைமுடிக்கு ஆரோக்கியமான உணவு தேவை. ஊட்டச்சத்துக்கான நல்ல ஆதாரங்களாக இருக்கும் கீரைகள், காய்கறிகள், ஆரோக்கியமான விதைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.
தலைமுடி நீளமாக வளர வேண்டுமென்றால் அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இதற்கு காரணம் தலைமுடி பிளவு முனைகளால் நிரப்பப்பட்டு, முடி வளர்ச்சியை நிறுத்துகின்றன. இதனால் தொடர்ந்து தலைமுடியை ட்ரிம் செய்வதால் முடி விரைவாக வளர உதவும்.
மேலும் படிக்க: வாரம் ஒரு முறை தலைமுடிக்கு தயிர் யூஸ் பண்ணுங்க; முடி உதிர்வுக்கு குட் பாய் சொல்லுங்க
ஸ்கால்ப் மசாஜ் முடியை விரைவாக வளர உதவும். ஏனென்றால், உச்சந்தலையை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், மேலும் உச்சந்தலையில் இயற்கையான முறையில் எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கும், இதனால் தலைமுடி வலுவாகவும் வேகமாகவும் வளரச் செய்யும். விரல் நுனியில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும் அல்லது ஒரு ஹேர் ஆயிலை எடுத்து தலைமுடியில் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
நிறைய பெண்கள் தினமும் ஷாம்பு போட்டு தலைமுடியை நீளமாகவும் அழகாகவும் மாற்றலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலையை வறண்டு, இயற்கையான முடி எண்ணெயை இழக்கச் செய்யும். முடிக்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பது இயற்கையாக முடி ஏற்படும் எண்ணெய் தான். வாரத்திற்கு 4 முறைக்கு மேல் தலைமுடியைக் கழுவ வேண்டாம்.
அதிக உராய்வை ஏற்படுத்தும் மற்றும் தலைமுடியை சிக்க வைக்கும் பருத்தி உறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மென்மையான தலையணை உறைகளை தேர்ந்தெடுக்கவும். தலையணையில் சிக்கிய முடி எளிதில் உடைந்துவிடும், இதனால் அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. மென்மையான மற்றும் குறைந்த உராய்வை ஏற்படுத்தும் பட்டு உறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படிக்க: தாங்க முடியாத பொடுகு தொல்லையா? எளிதில் குணப்படுத்த வீட்டில் இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும்
ஆலிவ், தேங்காய், ஆமணக்கு அல்லது வேப்ப எண்ணெய் போன்ற எண்ணெய்களால் தலைமுடியை மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவும். இது நீண்ட கூந்தலை விரைவாக அடைய உதவுகிறது.
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும். மேலும், மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடி வளர்ச்சி குறித்து அதிகமாக கவலைப்பட வேண்டாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]