வாரம் ஒரு முறை தலைமுடிக்கு தயிர் யூஸ் பண்ணுங்க; முடி உதிர்வுக்கு குட் பாய் சொல்லுங்க

தலைமுடி பிரச்சனைகளுக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வாக தயிர் பயன்படுத்தலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடியை காப்பதோடு, அதன் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகின்றன.
image

கோடை காலத்தில் வெப்பம் மற்றும் வியர்வை அதிகரிப்பதால், தலைமுடிக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முடி உதிர்தல், முடி வறட்சி, தோல் அரிப்பு போன்றவை இந்த காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வாக தயிர் பயன்படுத்தலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடியை காப்பதோடு, அதன் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகின்றன. அந்த வரிசையில் தலைமுடிக்கு தயிர் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:


தயிரில் புரதம், கால்சியம், லாக்டிக் அமிலம், வைட்டமின்கள் (B2, B5, B12) மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவுகின்றன, முடி கொட்டுவதை குறைக்கின்றன மற்றும் தோல் நோய்களை தடுக்கின்றன.

எப்படி தயிரை முடியில் பயன்படுத்துவது?


தயிர் மற்றும் தேன் மாஸ்க்:


2 ஸ்பூன் தயிருடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முடியில் பூசி 30 நிமிடம் விட்டு கழுவவும். இது முடியை ஊட்டப்படுத்தி மினுமினுப்பை அதிகரிக்கும்.


தயிர் மற்றும் எலுமிச்சை:


தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடிக்கு பூசினால், முடி வெளுப்பு குறையும்.

முடியை இயற்கையாகக் குளிர்விக்கும்:


கோடை காலத்தில் தலைமுடி வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. தயிர் ஒரு இயற்கையான குளிர் பொருளாக செயல்படுகிறது. இதை முடியில் பூசினால், தோல் எரிச்சல் மற்றும் வெப்பம் குறைகிறது. மேலும், தயிர் முடியின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

curd

முடி உதிர்வதைக் குறைக்கும்:


தயிரில் உள்ள புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் முடியின் வேர்களை பலப்படுத்துகின்றன. இது முடி உதிர்வதை குறைக்கிறது மற்றும் புது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை தயிரை முடியில் பூசினால், முடி உதிர்வது குறையும்.


முடி வெளுப்பை தடுக்கும்:


கோடை காலத்தில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் முடியின் நிறத்தை மாற்றி வெளுப்பாக்குகின்றன. தயிரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாக்கின்றன. மேலும், இது முடியை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்கிறது.

PROD_Curd-Mask_1669702252660_thumb_1200

தோல் அரிப்பு மற்றும் பொடுகை கட்டுப்படுத்தும்:


கோடை காலத்தில் தோல் வியர்வை மற்றும் பாக்டீரியா காரணமாக தலையில் அரிப்பு மற்றும் பொடுகு ஏற்படுகின்றன. தயிரில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் பண்புகள் இந்த பிரச்சினைகளை குறைக்கின்றன. தயிரை முடியில் பூசி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவினால், தோல் எரிச்சல் மற்றும் பொடுகு குறையும்.

மேலும் படிக்க: முகம் குண்டா இருக்குனு கவலையா? கொழுப்பை கரைக்க இந்த விஷயங்கள் செய்தால் போதும்

அந்த வரிசையில் கோடை காலத்தில் தலைமுடியை பராமரிக்க தயிர் ஒரு சிறந்த இயற்கையான வழிமுறையாகும். இது முடியை பாதுகாப்பதோடு, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகும். வாரத்திற்கு ஒரு முறை தயிர் மாஸ்க் பயன்படுத்தி நீங்களும் இனி ஆரோக்கியமான மற்றும் அழகான முடியை பெறலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP