herzindagi
image

முகம் குண்டா இருக்குனு கவலையா? கொழுப்பை கரைக்க இந்த விஷயங்கள் செய்தால் போதும்

அதிகப்படியான முகம் மற்றும் கன்னம் கொழுப்பு பல பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது முகத்தை வீங்கியதாகவும், உருண்டையாகவும் தோற்றமளிக்கச் செய்யும். 
Editorial
Updated:- 2025-06-01, 00:56 IST

பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். உடல் எடை கூடினால் ஏற்படும் அதே கவலை ஒரு சிலருக்கு முகம் குண்டாக இருந்தாலும் அதிக கவலை ஏற்படும். அதிகப்படியான முகம் மற்றும் கன்னம் கொழுப்பு பல பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது முகத்தை வீங்கியதாகவும், உருண்டையாகவும் தோற்றமளிக்கச் செய்யும். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தபடி சில எளிய முறைகளைப் பின்பற்றி இந்த முகத்தில் தொங்கும் எக்ஸ்ட்ரா கொழுப்பை குறைக்கலாம். உங்களுக்கு உதவும் 6 சிம்பிள் டிப்ஸ் குறித்து இங்கு பார்ப்போம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்:


தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, கொழுப்பை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, வெந்நீர் குடிப்பது முக கொழுப்பை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.


சீரான உணவு முறை:


ஜங்க் ஃபுட், எண்ணெய் மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதே போல சர்க்கரை மற்றும் உப்பு அளவை குறைப்பதும் முக கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.

healthy-food-clean-eating-selection-royalty-free-image-854725402-1541694348

முகப் பயிற்சிகள்:


முகப் பயிற்சிகள் முகத் தசைகளை வலுப்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவுகின்றன. உதாரணமாக:


தாடை உயர்த்தும் பயிற்சி: தலையை நிமிர்ந்து, கீழ் தாடையை மேல் நோக்கி உயர்த்தி 5 விநாடிகள் வைத்திருந்து விடவும்.


பல் சீவும் பயிற்சி: பற்களை சீவுவது போல் வாயை அசைப்பது தாடைப் பகுதியை சரியான நிலையில் வைக்க உதவும்.

double chin

கார்டியோ பயிற்சி:


ரன்னிங், நடைப்பயிற்சி, ஜம்பிங் ஜாக், ஸ்விம்மிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் உடல் கொழுப்பை குறைக்கும். இது முகம் மற்றும் தாடை கொழுப்பையும் குறைக்க உதவும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது.

போதுமான உறக்கம்:


போதுமான உறக்கம் இல்லாவிட்டால், உடல் ஹார்மோன் சீர்குலைந்து கொழுப்பு அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது முகத்தின் வீக்கம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும். எனவே அழகான முகம் வேண்டும் என்றால் நன்றாக தூங்க வேண்டும்.

sleeping

மது அருந்துதல் மற்றும் புகையிலை தவிர்க்கவும்:


மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு முகத்தில் நீர் தங்க வைத்து, தாடை கொழுப்பை அதிகரிக்கும். இவற்றை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், முக அழகுக்கும் நல்லது.

மேலும் படிக்க: பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைக்க; இந்த பயிற்சிகளை வீட்டில் செய்து பாருங்க

எனவே இந்த 6 எளிய வழிகளைப் பின்பற்றி முகம் மற்றும் தாடை கொழுப்பை படிப்படியாக குறைக்கலாம். குறிப்பாக நல்ல உணவு, பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியம். இதை தவறாமல் செய்து வந்தால் ஒரே மாதத்தில் உங்கள் முகத்தில் நீங்கள் வித்தியாசத்தை உணரலாம். 

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]