herzindagi
image

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? எளிதில் குணப்படுத்த வீட்டில் இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும்

இந்த பிரச்சனையை தீர்க்க பூண்டு மற்றும் தேன் போன்ற இயற்கை மூலப்பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை தோல் பாதிப்புகளை குறைக்கும் அதே நேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-05-30, 13:49 IST

தலைமுடி பிரச்சனைகளில் பல பெண்களும் ஆண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இந்த பொடுகு தான். குறிப்பாக வெளியில் செல்லும்போது தலை பயங்கரமாக அரிக்கும், தப்பி தவறி கூட தலையை சொறிந்தால் பொடுகு நம் ட்ரெஸ்களில் கொட்ட ஆரம்பித்து விடும். இந்த பொடுகு பிரச்சனை உச்சந்தலையில் தோல் உலர்ந்து கொட்டுவதால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க பூண்டு மற்றும் தேன் போன்ற இயற்கை மூலப்பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை தோல் பாதிப்புகளை குறைக்கும் அதே நேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. அந்த வரிசையில் பொடுகு பிரச்சனையை குணப்படுத்த தேன் மற்றும் பூண்டை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பூண்டின் மருத்துவ குணங்கள்:


பூண்டு நிறைய ஆன்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபங்கல் பண்புகளை கொண்டுள்ளது. இது தோலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், பூண்டில் உள்ள சல்பர் சத்து தோல் செல்களை புதுப்பிக்க உதவுகிறது, இது பொடுகு பிரச்சனையை குறைக்க உதவும்.

garlic

தேனின் மருத்துவ பண்புகள்:


தேன் ஒரு இயற்கையான ஈரப்பதம் அளிக்கும் மாய்சரைசர் ஆகும். இது தோலின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், தேனில் ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இவை தோல் அழற்சியை குறைக்க உதவுகின்றன.

honey-1296x728-header

பொடுகை நீக்க பூண்டு மற்றும் தேன் பயன்பாடு:


பூண்டு மற்றும் தேன் கலவை:


தேவையான பொருட்கள்:

 

  • 4-5 பூண்டு பல்
  • 2 தேக்கரண்டி தேன்


தயாரிப்பு முறை:

 

  • முதலில் பூண்டை நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கவும்.
  • இதில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை தலையில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டுவிடவும்.
  • பின்பு சாதாரண தண்ணீரால் கழுவவும்.
  • இந்த கலவை தோலின் செதில்களை குறைக்கும், பொடுகை நீக்கும் மற்றும் முடியை மென்மையாக்கும்.

பூண்டு எண்ணெய் பயன்பாடு:


தேவையான பொருட்கள்:

 

  • 5-6 பூண்டு பல்
  • ½ கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்


தயாரிப்பு முறை:

 

  • முதலில் பூண்டை எண்ணெயில் சேர்த்து சூடாக்கவும்.
  • இது குளிர்ந்த பிறகு, இந்த எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் விட்டுவிடவும்.
  • பின்பு மிதமான ஷாம்பூ கொண்டு கழுவவும்.
  • இந்த பூண்டு எண்ணெய் முடிவேர்களை பலப்படுத்தும் மற்றும் பொடுகை குறைக்கும்.

மேலும் படிக்க: அழகான வில் போன்ற புருவம் வேண்டுமா? பைசா செலவில்லாமல் இந்த இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

தேன் மற்றும் தயிர் கலவை:


தேவையான பொருட்கள்:

 

  • 2 தேக்கரண்டி தேன்
  • 3 தேக்கரண்டி தயிர்


தயாரிப்பு முறை:

 

  • தேன் மற்றும் தயிர் கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும்.
  • இதை தலையில் பூசி 20 நிமிடம் விட்டுவிடவும்.
  • பிறகு குளிர் தண்ணீரில் கழுவவும்.
  • இது தோலின் ஈரப்பதத்தை பராமரிக்கும் மற்றும் பொடுகு ஏற்படும் அரிப்பை குறைக்கும். அதே போல தயிர் உங்கள் உச்சந்தலையை குளிர்விக்க உதவும்.

பூண்டு மற்றும் தேன் ஆகியவை பொடுகு பிரச்சினையை இயற்கையாக சரிசெய்ய உதவும் சிறந்த வீட்டு மருந்துகள். இவற்றை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால், பொடுகு குறையும் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். எந்தவொரு ஒவ்வாமை ஏற்பட்டாலும், உடனே இந்த வீட்டு வைத்தியங்களை நிறுத்தி மருத்துவரை அணுகவும்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]