வாயைச் சுற்றியுள்ள கருமையான சருமத்தை எவ்வாறு ஒளிரச் செய்வது என்பதைக் கண்டறிய நீங்கள் இங்கு வந்திருந்தால், முதலில் பிரச்சனைக்கான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வாயைச் சுற்றியுள்ள சருமம் மெல்லியதாக இருப்பதால் சேதமடைய அதிகம் வாய்ப்புகள் உள்ளது. இந்த கரும்புள்ளிகள் அதிக அளவு மெலனின் காரணமாக வருகிறது, அதன்பின் சூரிய ஒளி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், பின் உங்களை சுற்றியுள்ள காலநிலை போன்ற பல காரணங்களால் வாயைச் சுற்றி கருமை ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: இரண்டே பொருள்! உங்களை இளமையாக வைத்திருக்க தினமும் குளிக்கும் தண்ணீரில் இதை கலக்கவும்!
எலுமிச்சை இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. தேன் மற்றும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகரிக்கிறது. அதனால் தேன் அல்லது தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அடர்த்தியான பேஸ்ட் செய்து கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவவும். உலர்ந்த பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும். அதன் மாற்றத்தை உங்களால் உணர முடியும். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கருமை வேகமாக குறையும்.
சுத்தமான சருமத்தை பெறவும் மற்றும் வயது முதிர்வை தடுக்க சிறந்தது கடலை மாவு. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி இயற்கையாகவே முகத்தை ஒளிரச் செய்கிறது. கடலை மாவு, சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிது பச்சை பால் சேர்த்து ஸ்க்ரப் மாஸ்க் போல் செய்து கொள்ளவும். பின் கருனை இருக்கும் பகுதிகளில் தடவி 10-15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதன் பிறகு நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க உதவுகிறது. இது வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கை அரைத்து அதன் பேஸ்ட்டை கருமை இருக்கும் பகுதிகளில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும். உதடை சுற்றியிருக்கும் கருமை வெகுவாக குறைய தொடங்கும்.
வெங்காயம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. வெங்காய சாறு சரும செல்களை ஆரோக்கியமாக வைத்து இருக்கும், பின் வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. வெங்காய சாற்றை எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து கருமையான பகுதிகளில் தடவி உலர விடவும். சிறிது நேரன் கழித்து நீரில் கழுவவும்.
காய்ந்த பச்சை பட்டாணியை எடுத்து பொடி செய்து கொள்ளவும். பின் பாலுடன் கலந்து மென்மையான பேஸ்ட் செய்யவும். அதன்பிறகு கருமை உள்ள பகுதிகளில் தடவி 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். பச்சைப் பட்டாணி மெலனின் அளவைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கருமையான உங்கள் உதடுவை செக்கச்செவேல் என்று மாற்ற டிப்ஸ்!!
நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த குறிப்புகளை பயன்படுத்தவும். உங்கள் உதடை சுற்றியுள்ள கருமை போக்க சிறந்த வழியாக இருக்கும்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]