குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிக்க இயற்கை முறையில் க்ளென்சர் தயாரிக்கலாம்!!

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த க்ளென்சர்களை நீங்களும் முயற்சிக்கலாமே.

simple homemade cleanser for skin care in winter

எந்த பருவ காலமாக இருந்தாலும், முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். முகத்தை சுத்தம் செய்ய க்ளென்சர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த க்ளென்சர்களைப் பயன்படுத்தினால் உங்கள் சருமம் வறட்சியாகிவிடும். இதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்படக்கூடும்.

எனவே, சருமத்தை நல்ல முறையில் பராமரிக்க, வீட்டிலேயே ரசாயனங்கள் அற்ற க்ளென்சர்களை தயாரித்து பயன்படுத்தலாம். பருவகாலத்திற்கேற்ற ஊட்டமளிக்கும் க்ளென்சர்களை பயன்படுத்துவதன் மூலம் சரும வறட்சியை போக்கலாம். அவ்வாறு எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய கிளென்சர்களை இன்று இப்பதிவின் மூலம் படித்தறிந்து பலன்பெறுங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் க்ளென்சர்

olive oil for skin

இந்த க்ளென்சர் குளிர் காலத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த க்ளென்சரை தயாரிக்கும் போது, பல வகையான ஊட்டமளிக்கும் பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

  • தேன்- ஒரு டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
  • தயிர்- 2 டேபிள்ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  • இந்த க்ளென்சர் செய்ய, முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  • இப்போது இந்த க்ளென்சரை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • இதை 2-3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • அதன் பிறகு நீங்கள் டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்யலாம்.

பாலேடு மற்றும் ஆரஞ்சு சாறு கிளென்சர்

using orange for skin

இது எல்லா வகை சருமத்திற்கும் பயன்படுத்தக்கூடிய க்ளென்சராகும்.

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள்- பாதி
  • பாலேடு (கிரீம்) - ஒரு டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
  • ஆரஞ்சு சாறு- ஒரு டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  • முதலில் ஆப்பிளை ஃபோர்க் பயன்படுத்தி மெதுவாக மசிக்கவும்.
  • இப்போது அதில் பாலேடு, ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆரஞ்சு சாறு கலந்து மென்மையான பேஸ்ட் தயார் செய்யவும்.
  • இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே விடவும்.
  • பின்னர் உங்கள் விரல் நுனியை லேசாக ஈரப்படுத்தி, உங்கள் கைகளால் மசாஜ் செய்யவும். இறுதியாக தண்ணீர் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யவும்.

தக்காளி மற்றும் பால் க்ளென்சர்

using tomato for skin

தக்காளி மற்றும் பால் பயன்படுத்தி ஒரு சிறந்த க்ளென்சர் தயாரிக்கலாம். தக்காளி உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதோடு, பளபளப்பாகவும் மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்

  • தக்காளி கூழ்- ஒரு டீஸ்பூன்
  • பால்- ஒரு டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  • முதலில் தோல் நீக்கிய தக்காளியை மசித்து கூழ் செய்யவும்.
  • இப்போது அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த க்ளென்சரை உங்கள் முகத்தில் தடவி கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • இதன் பிறகு, சுமார் பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
  • இறுதியாக, குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவவும்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி க்ளென்சர்

உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால், வெள்ளரி மற்றும் தக்காளியை பயன்படுத்தி ஒரு சிறந்த க்ளென்சர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய்- பாதி
  • தக்காளி- 1

பயன்படுத்தும் முறை

  • இந்த க்ளென்சர் தயார் செய்ய, வெள்ளரி மற்றும் தக்காளியை அரைக்கவும்.
  • அரைத்த கலவையை முகத்தில் தடவவும்.
  • கைகளால் சருமத்தை மென்மையாக மசாஜ் செய்து சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
  • இறுதியாக, தண்ணீரில் முகத்தை கழுவவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP