பத்து நிமிடத்தில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பளிச்சிடும் வெண்மை தர வேண்டுமா?

உங்கள் முகம் பொலிவை இழந்துவிட்டதா? உங்கள் முகத்தின் அழகை மீண்டும் பெற இந்த வீட்டு வைத்தியம் உதவும்.

remove dirt from face then use these method

கடலை மாவு ஃபேஸ் பேக்

எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக கடலை மாவு இருக்கும், இதை பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்யலாம். கடலை மாவில் சில பொருட்களை மட்டும் கலந்து அருமையான ஃபேஸ் பேக் செய்யலாம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும்.

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு - 1 டீஸ்பூன்
  • வேப்ப எண்ணெய் - 5 துளிகள்
  • தயிர் - 1 டீஸ்பூன்

செய்முறை

use gram flour

  • ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, தயிர் மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து கொள்ளவும் .
  • நன்கு கலந்த பின்பு உங்கள் முகத்தில் தடவவும்.
  • முகத்தில் 10 நிமிடம் வைத்துவிட்டு, பிறகு அதனை கழுவவும்.

காபி பயன்படுத்தவும்

காபியை முகத்திற்கு ஃபேஸ் பேக், ஸ்க்ரப் என பல வகையில் பயன்படுத்தலாம். நம் முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • காபி தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 6-7 சொட்டுகள்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை

use coffee

  • ஒரு பாத்திரத்தில் காபி தூள் , சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் விட்டு விடுங்கள்.
  • 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
  • இந்த குறிப்புகளை வாரத்தில் 3 நாட்கள் பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து சருமம் பொலிவு பெரும்

இந்தத் தகவல் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்ய மறக்காதீர்கள். இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து படிக்க ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP