பூனைகள் மர்மமான மற்றும் ஆன்மீக சக்தி கொண்ட உயிரினங்களாக கருதப்படுகின்றன. ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, ஒரு பூனை உங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்தால், அது சில குறிப்பிட்ட அறிகுறிகளைக் காட்டுகிறது. பூனைகள் பில்லி சூன்யங்களைக் கண்டறியும் திறன் கொண்டவை என்று பழங்கால நம்பிக்கைகள் கூறுகின்றன. நம் முன்னோர்கள் இவற்றை ஆபத்துகளுக்கான எச்சரிக்கை அல்லது நல்ல செய்திகளின் தூதர்களாகக் கருதினர். இந்த கட்டுரையில், பூனை வீட்டிற்கு வருவதன் ஜோதிட மற்றும் ஆன்மீக அர்த்தங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
செழிப்பின் அடையாளம்:
ஒரு வீட்டிற்கு பூனை தவறாமல் வருவது அந்தக் குடும்பம் நல்ல உணவு செழிப்போடு வாழ்கிறது என்பதைக் குறிக்கிறது. பூனைகள் உணவு கிடைக்கும் பாதுகாப்பான இடங்களையே தேர்ந்தெடுக்கும். இது அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நல்ல ஆற்றல்களின் குறியீடு:
பூனைகள் எதிர்மறை சக்திகள் இருக்கும் இடங்களுக்கு வராது. எனவே உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பூனை வருவது அந்த இடம் நிம்மதியான, பாதுகாப்பான மற்றும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்த சூழல் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மங்களகரமான அறிகுறி:
ஒரு பூனை உங்கள் வீட்டில் குட்டி போடுவது மிகவும் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இது குறிப்பாக வீட்டில் வசிக்கும் தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
ஜோதிடத்தின்படி, பூனை சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் மனதின் நிலை, உணர்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. ஒரு பூனை உங்கள் வீட்டிற்கு வந்தால், அது உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை குறிக்கலாம். சில ஆன்மீக நம்பிக்கைகளின்படி, பூனை செல்வத்தைக் கொண்டுவரும். குறிப்பாக கருப்பு பூனை வந்தால், அது அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. அதே போல ஒரு சில சமயங்களில், பூனை வருவது எதிர்மறை சக்திகளின் உள்ளீட்டை குறிக்கலாம். இது வீட்டில் அமைதியின்மை அல்லது தடைகளை காட்டலாம்.
மேலும் படிக்க: யாரையும் நம்பாத ராசிக்காரர்கள் இவர்கள் தான்; உங்க ராசி இருக்கா பாருங்க
பூனை வருவதன் ஆன்மீக அர்த்தம்?
ஆன்மீகத்தில், பூனைகள் மூன்றாவது கண்ணைக் கொண்டிருக்கின்றன என்று நம்பப்படுகிறது. அவை நல்ல மற்றும் கெட்ட ஆற்றல்களை உணரக்கூடியவை. பூனை உங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்தால், அது அந்த இடத்தில் நல்ல ஆற்றல் இருப்பதைக் காட்டுகிறது. அதே போல பூனை தொடர்ந்து உங்கள் வீட்டைச் சுற்றி அலைந்தால், வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கலாம். இதை நீக்க பூஜை அல்லது ஹோமம் செய்யலாம்.
பூனைகளிடம் எப்படி நடந்துகொள்வது?
பூனைகளை ஒருபோதும் துரத்தக்கூடாது. அவற்றுக்கு அன்பாக உணவளிப்பது நல்ல கர்மாவை ஈர்க்கும். வீட்டை சுத்தமாகவும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்ததாகவும் வைத்திருப்பது பூனைகளின் வருகையை அதிகரிக்கும். பூனைகளின் வருகை நமக்கு இயற்கை கொடுக்கும் ஒரு முக்கியமான செய்தியாகும். இதை எப்போதும் நல்லதாக எடுத்துக்கொண்டு, நேர்மறை மனநிலையுடன் வாழுங்கள்.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation