இந்துக்கள் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அவர்களுடைய முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை தினத்தில் இதை மேற்கொண்டாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களும் மிகவும் பிரசித்திப் பெற்றது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது. இம்மாதத்தில் எப்போது மஹாளய அமாவாசை வருகிறது? மூதாதையர்களுக்கு எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்? என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: திருமண தடைக்கு காரணமா செவ்வாய் தோஷம்? பரிகாரங்கள் இதோ!
மஹாளய அமாவாசை 2025:
இந்த 2025 ஆம் ஆண்டிற்கான மஹாளய அமாவாசை வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 01.03 மணிக்கு துவங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 1.42 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். மற்ற அமாவாசை நாட்களைக் காட்டிலும் இந்த புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளில் வழிபாடு மேற்கொள்ளும் போது எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்கும் என்கிறது ஐதீகம். ஏனென்றால் இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யக்கூடிய வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குகிறார்கள் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வீட்டு வாசலில் காக்கா கரைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆன்மிகம் கூறுவது என்ன?
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]