இரவில் நாய் ஊளையிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? ஜோதிடம் கூறுவது என்ன?

நாய் ஊளையிடுவது பல காரணங்களால் நிகழலாம். ஜோதிடம் மற்றும் பழங்கால நம்பிக்கைகள் இதை ஆன்மீக காரணங்களுடன் இணைக்கின்றன.
image

நாய் என்பது பைரவரின் வாகனம் ஆகையால் இவைகளுக்கு ஆபத்தை முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதாகவும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிடுவது ஒரு பொதுவான நிகழ்வு. இது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். சிலர் இதை அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக நினைக்கிறார்கள். நாய்கள் அழுது ஊளையிடும் சத்தம் நம் காதுகளில் விழுந்தால் வரவிருக்கும் ஆபத்தை நமக்கு முன்கூட்டியே இது உணர்த்துகிறது என்று அர்த்தம். நம் வீட்டில் வளர்க்கும் நாய் இதுபோல அழுதால் நமக்கு ஏதோ துன்பம் வரப்போகிறது என்பதை நாம் உணர வேண்டும். ஒரு சில நேரங்களில் இரவில் வண்டியில் செல்லும்போது நாய் நம் பின்னாடியே துரத்தும் அல்லது நம்மை பார்த்து கொலைத்துக் கொண்டே இருக்கும். இதற்கும் ஜோதிடத்தில் பல அர்த்தம் உள்ளது. அந்த வரிசையில் இரவு நேரங்களில் நாய் ஊளைவிட்டால் அதற்கு ஜோதிடத்தில் என்ன அர்த்தம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஜோதிடம் மற்றும் நம்பிக்கைகளின்படி, நாய்கள் மனிதர்களுக்கு புலப்படாத ஆன்மீக சக்திகளை உணரக்கூடியவை. அவை தீய ஆற்றல்கள் அல்லது ஆவிகளின் முன்னிலையை உணர்ந்து எச்சரிக்கையாக ஊளையிடுகின்றன. சில நம்பிக்கைகளின்படி, நாய் ஊளையிடுவது கெட்ட சகுனம் என்று கருதப்படுகிறது. இது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

dog howling

வெவ்வேறு நேரங்களில் நாய் ஊளையிடுவதன் அர்த்தம்:

  • மாலை நேரம் (6 PM - 9 PM): இந்த நேரத்தில் நாய் ஊளையிடுவது பொருளாதார இழப்பைக் குறிக்கலாம்.
  • அர்த்த ராத்திரி (12 AM - 3 AM): இது ஆவிகளின் செயல்பாட்டைக் குறிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
  • அதிகாலை நேரம் (3 AM - 5 AM): இது நேர்மறை மாற்றத்தைக் குறிக்கலாம், ஆனால் சில பாரம்பரியங்களில் இது நோய் அல்லது துன்பத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

அறிவியல் அர்த்தம் என்ன?


அறிவியல் படி, நாய்கள் மனிதர்களை விட உணர்திறன் மிக்க காது வளம் கொண்டவை. அவை தொலைதூர ஒலிகளைக் கேட்கின்றன, மேலும் பிற நாய்களுடன் தொடர்பு கொள்ள ஊளையிடுகின்றன. சில நேரங்களில், அவை தனிமையை உணர்ந்தோ அல்லது வலியில் இருந்தாலோ ஊளையிடலாம். மேலும், சில நாய்கள் சந்திரனின் ஒளியால் தூண்டப்பட்டு ஊளையிடுவதும் உண்டு.

மேலும் படிக்க: புது வீடு வாங்கப்போறீங்களா? இந்த வாஸ்து குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்

ஜோதிட முறைகளின்படி தீர்வுகள்:


நாய் ஊளையிடுவதை தீய சகுனமாக நீங்கள் கருதினால், சில ஜோதிட முறைகளை பின்பற்றலாம்: வீட்டின் முன்புறம் வெள்ளை உப்பு தெளிக்கவும், கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்யவும் மற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பது நல்ல புண்ணியம் என்று கருதப்படுகிறது.

அந்த வரிசையில் நாய் ஊளையிடுவது பல காரணங்களால் நிகழலாம். ஜோதிடம் மற்றும் பழங்கால நம்பிக்கைகள் இதை ஆன்மீக காரணங்களுடன் இணைக்கின்றன. ஆனால் அறிவியல் இதற்கு வேறு சில விளக்கங்களை தருகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP