புது வீடு வாங்கப்போறீங்களா? இந்த வாஸ்து குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்

புது வீடு வாங்கும் போது வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்லிணக்கம் கிடைக்கும். அந்த வரிசையில் புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  
image

நாம் கட்டும் வீட்டில் காற்று நீர் நெருப்பு பூமி மற்றும் வானம் ஆகிய பஞ்சபூதங்களும் சமநிலை பெற்றிருக்கும் படி வீடு கட்டினால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி பஞ்சபூதங்களின் சமநிலை பெற வீடு கட்டும் போது நீங்கள் சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு மற்றும் வாழ்க்கையின் நலனுக்காக பின்பற்றப்படும் பண்டைய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு அறிவியல் ஆகும். புது வீடு வாங்கும் போது வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்லிணக்கம் கிடைக்கும். அந்த வரிசையில் புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வீட்டின் திசை:


வீட்டின் திசை மிக முக்கியமானது. வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் உள்ள வீடுகள் வாஸ்துவின் படி சிறந்தவை. வடகிழக்கு திசை (ஈசான்ய கோணம்) செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். தெற்கு மற்றும் மேற்கு திசைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் தென்மேற்கு திசையில் முக்கிய அறைகள் அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.


பிரதான வாயிலின் அமைப்பு:


வீட்டின் பிரதான வாயில் (முகப்பு வாசல்) சரியான திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு, வடக்கு அல்லது கிழக்கு திசையில் வாயில் அமைப்பது நல்லது. வாசல் உள்ளே நோக்கி திறக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், வாயிலுக்கு முன்பாக பெரிய தடைகள் (மரங்கள், கம்பங்கள்) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

vasal vastu

சமையலறை திசை:


சமையலறை தென்கிழக்கு திசையில் (ஆக்னேய கோணம்) அமைப்பது நல்லது. அதே போல சமையல் அடுப்பு தெற்கு நோக்கி அமைக்கப்பட வேண்டும். சமையலறையில் தொட்டி மற்றும் அடுப்பு ஒன்றுக்கொன்று அருகில் இல்லாமல் பார்க்க வேண்டும். சமையலறையை வடகிழக்கு திசையில் அமைப்பது தவறானது.


படுக்கையறையின் வாஸ்து:


படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைப்பது நல்லது. படுக்கை தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும்படி வைக்க வேண்டும். படுக்கையின் கீழ் கண்ணாடி பொருட்கள் வைக்கக்கூடாது. கணவன் மற்றும் மனைவியின் படுக்கை ஒரே துண்டாக இருக்க வேண்டும், பிளவுபட்ட துண்டுகள் தவறானது.

bedroom

கழிவறை மற்றும் குளியலறை வாஸ்து:


கழிவறை மற்றும் குளியலறை வடகிழக்கு அல்லது ஈசான்ய கோணத்தில் இருக்கக் கூடாது. மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இவற்றை அமைப்பது நல்லது. கழிவறை மற்றும் குளியலறை ஒன்றாக இருந்தால், அதன் கதவு எப்போதும் மூடியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


வீட்டின் மையப் பகுதி (பிரம்மஸ்தானம்):


வீட்டின் நடுப்பகுதி (பிரம்மஸ்தானம்) வெறுமையாகவோ அல்லது ஹால் போன்ற திறந்த இடமாகவோ இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் கழிவறை, அடுப்பு அல்லது படிக்கட்டுகள் அமைப்பது தவறு. இது வீட்டின் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைப் பாதிக்கும்.

மேலும் படிக்க: தேவையில்லாத வீண் செலவு செய்யும் ராசிகள் யார் தெரியுமா? கட்டுப்படுத்துவது எப்படி?

நீர் தொடர்பான வாஸ்து:


நீர்த்தொட்டி, கிணறு அல்லது பம்ப் போர்வெல் வடகிழக்கு திசையில் அமைப்பது நல்லது. தென்மேற்கு திசையில் நீர் சேமிக்கும் இடம் அமைப்பது வாஸ்துப்படி தவறானது. மேலும், நீர் தொட்டிகள் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும்.


மரங்கள் மற்றும் தோட்டம்:


வீட்டின் வடகிழக்குப் பகுதியில் பெரிய மரங்கள் நடுவது தவறு. ஆனால் சிறிய செடிகள் அல்லது மலர் தோட்டம் அமைக்கலாம். மேலும் தென்மேற்கில் உயரமான மரங்கள் இருக்கலாம்.

புதிய வீடு வாங்கும் போது அல்லது காட்டும் போது இந்த அடிப்படை வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பு கிடைக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது வாழ்க்கையின் சீரான ஓட்டத்திற்கு உதவும் ஒரு அறிவியல் முறையாகும். எனவே, வீடு வாங்கும் முன் இந்த குறிப்புகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP