herzindagi
rasam for kidney stone

Rasam for Kidney Health : சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு எலுமிச்சை ரசம்

ரசம் சாதத்தின் மகிமையை வெளிநாட்டில் வாழ்பவர்களிடம் கேட்டு பாருங்கள், 2 நாட்கள் வெளி உணவை சாப்பிட்டாலே மனம் ரசம் சத்தத்திற்கு ஏங்க ஆரம்பித்துவிடும்…
Editorial
Updated:- 2023-03-26, 08:00 IST

ஆயிரகணக்கில் செலவு செய்து உணவு சாப்பிட்டாலும் அம்மா வைக்கும் ரசத்திற்கு ஈடாகுமா என்ன? அம்மாவின் கை பக்குவம் ஒரு புறம் இருக்க இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் தனித்துவமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளன. செரிமானம் முதல் சளி வரை, உடம்பு சரி இல்லாத நாட்களில் கை கொடுப்பது இந்த ரசம் சாதம் தான்.

ரசம் என்றாலே அது ஆரோக்கியம் ஆனது தான், அதிலும் புளி சேர்ககாமல் வாழை தண்டில் ரசம் வைத்தால் கூடுதல் சிறப்பு தானே? வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்தது. இது சிறுநீரக கற்களை அகற்றும் வல்லமை உடையது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இன்றைய பதிவில் சிறுநீரக கற்களை தடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாழைத்தண்டு எலுமிச்சை ரசத்தின் செய்முறையை பார்க்கப் போகிறோம். இதன் செய்முறையை படித்தறிந்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: மைதா, பிரட் கிரம்ஸ் சேர்க்காத ஹெல்தியான பன்னீர் பாப்கார்ன் ரெசிபி

தேவையான பொருட்கள்

banana stem rasam

  • வாழைத்தண்டு - ½ கப்
  • எலுமிச்சை - 1(சாறு)
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 ½ டீஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • தக்காளி - 1
  • பூண்டு - 10-12
  • தனியா - ½ டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு

  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
  • வெந்தயம் - 5-7
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • கருவேப்பிலை - சிறிதளவு

முன் ஏற்பாடுகள்

vazhaithandu for kidney health

முதலில் வாழை தண்டை சிறிய தூண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சாறு மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

வாழைத்தண்டு சாறுடன் ஒரு எலுமிச்சையின் சாறையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

வாழைத்தண்டு எலுமிச்சை ரசம் செய்வது எப்படி?

அரைக்க வேண்டிய மசாலா

  • முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் பூண்டு கருவேப்பிலை, மிளகு, சீரகம் மற்றும் தனியா விதைகளை ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
  • ரசம் சுவையாக இருக்க ரசத்திற்கான மசாலாவை சரியான பக்குவத்தில் அரைக்க வேண்டியது அவசியம். இதை முழுவதுமாக அரைக்க கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: செட்டிநாடு ஸ்டைலில் கலக்கலான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி

செய்முறை

vazhaithandu rasam

  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் பொடி, உப்பு மற்றும் ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • குறைந்த தீயில் வைத்து கருக்காமல் பொரிய விடவும். இதனுடன் கரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மசாலா கலவையை சேர்க்கவும்.
  • ரசம் நுரை பொங்க கொதி வர தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கால் கப் அளவிற்கு பச்சை தண்ணீர் சேர்க்கவும். ரசத்தை அதிக நேரம் கொதிக்க விட கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது தயாராக வைத்துள்ள வாழைத்தண்டு மற்றும் எலுமிச்சை சாறு கலவையை சேர்த்து கலக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறலாம்.

இந்த ரசம் வாழைத்தண்டின் வாசனையுடன், கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கலாம். உணவே மருந்து! ஆரோக்கியமான உணவை உண்டு நோய்களை தடுப்போம்.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் முயற்சி செய்து பாருங்கள். இதை பிறரும் முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர்களுடனும் பகிரந்து கொள்ளலாம். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]