herzindagi
image

கர்ப்பிணிகள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்; அத்துணை நன்மைகள் கொட்டிக்கிடக்குது!

கர்ப்ப காலத்தில் பெண்களின் எலும்புகள் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் கருப்பு உளுந்து மற்றும் கேப்பை சேர்த்து செய்யப்படும் அல்வாவை சாப்பிட வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-29, 11:53 IST

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் உன்னத தருணம். தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து மற்றொரு உயிரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப்படும் பெண்கள், கர்ப்ப காலத்தில் உடல் நலத்தில் அதீத அக்கறையுடன் செயல்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் வாரத்திற்கு ஒருமுறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு எலும்புகள் வலுவுடன் இருப்பதற்குத் தேவையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த ஒன்றாக உள்ளது கருப்பு உளுந்தைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா. இவற்றை எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்த முழு விபரம் இங்கே.

மேலும் படிக்க: அவல் வைத்து ருசியாக வடை செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

எலும்புகள் வலுவாகும் கருப்பு உளுந்து ராகி அல்வா:

தேவையான பொருட்கள்:

  • கருப்பு உளுந்து - ஒரு கப்
  • கேப்பை மாவு - ஒரு கப்
  • வெள்ளை எள் - அரை கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நாட்டு சர்க்கரை - ஒரு கப்
  • நல்லெண்ணெய் - சிறிதளவு
  • நெய் - 100 கிராம்
  • முந்திரி - 10

 மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா;  ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !

கருப்பு உளுந்து ராகி அல்வா:

  • ஒரு கடாயில் ஒரு கப் அளவிற்கு கரு்பு உளுந்தை எடுத்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக அதே கடாயில் சிறிதளவு வெள்ளை எள் சேர்த்து வறுக்க வேண்டும்.
  • வறுத்த வைத்துள்ள கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை எள்ளுடன் இரண்டு ஏலக்காய் ,சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக இதனுடன் ஒரு கப் அளவிற்கு கேப்பை மாவு, ஒரு சிட்டிகை உப்பு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணீர் போன்று இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் படிக்க: அதிக நேரம் எடுக்காது; சீக்கிரமாக சுவையான ஆப்பிள் பாயாசம் செய்யலாம்;  எளிய சமையல் குறிப்புகள் இதோ!

  • இதனுடன் ஒரு கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துக் கொண்டு 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். சிறிதளவு நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவிற்கு கிளறவும்.
  • இறுதியாக நெய்யில் முந்திரியைப் பொரித்து அல்வாவுடன் சேர்த்தால் போதும். சுவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள கருப்பு உளுந்து ராகி அல்வா ரெடி.

Image credit - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]