மத்தி மீன் குழம்பு வீடெங்கும் கம கமக்க இப்படி செஞ்சு ருசி பாருங்க

வீட்டில் மத்தி மீன் குழம்பு வைத்தால் அன்றைய நாளில் வீடெங்கும் வாசனை மணக்கும். முதல் மரியாதை படத்தில் வருவது போல இன்னும் கொஞ்சம் குழம்பு ஊற்று என உங்களிடம் மத்தி மீன் குழம்பு கேட்டு கொண்டே இருப்பார்கள்.
image

புரதச்சத்து தேவைப்படும் நபர்கள் மத்தி மீன் சாப்பிடுவது நல்லது. 100 கிராம் மத்தி மீனில் 22-25 கிராம் புரதச்சத்து கிடைக்கும். கேரள மத்தி மீன் குழம்பு ருசியில் தனித்துவமானது. மத்தி மீன் பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் தனியாக மசாலா பேஸ்ட் அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு சாப்பிட்டால் ருசியை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. 30-35 நிமிடங்களில் மத்தி மீன் குழம்பு தயாரித்துவிடலாம். பலரும் வஞ்சிரம், சீலா மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு முறை இந்த மத்தி மீன் குழம்பு செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுங்கள். அன்று பாராட்டு மழையில் நனைந்திடுவீர்கள்.

mathi meen recipe

மத்தி மீன் குழம்பு செய்ய தேவையானவை

  • மத்தி மீன்
  • நல்லெண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • கல் உப்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • சீரகத் தூள்
  • மல்லி தூள்
  • மிளகு தூள்
  • வெந்தயம்
  • கடுகு
  • புளி

மேலும் படிங்கசிப்பி காளான் குழம்பு : அட அட அசைவ உணவுகளே தோற்றிடும் சுவையில்

மத்தி மீன் குழம்பு செய்முறை

  • மசாலா பேஸ்ட் தயாரித்திட கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் பத்து பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். கொஞ்சம் கல் உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமாக வதங்கிவிடும்.
  • அடுத்ததாக இதை மிக்ஸியில் போட்டு இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத் தூள், நான்கு டீஸ்பூன் மல்லித் தூள், கால் டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் பதத்தில் அரைக்கவும்.
  • இதனிடையே அரை கிலோ மத்தி மீன்களை தண்ணீரில் நன்கு கழுவி மஞ்சள் தூள், கொஞ்சம் கல் உப்பு போட்டு ஊறவிடுங்கள்.
  • இப்போது கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளி சேருங்கள்.
  • தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு அரைத்த பேஸ்ட் முழுவதையும் போட்டு கலந்துவிடுங்கள்.
  • ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். எண்ணெய் பிரிந்து வரும் போது எலுமிச்சை சைஸ் புளியை தண்ணீரில் கரைத்து அதை ஊற்றவும்.
  • இரண்டு நிமிடம் கொதித்த பிறகு மத்தி மீன்களை போடுங்கள். மிதமான தீயில் மீண்டும் ஐந்து நிமிடங்களுக்கு மீன்களை வேக விடவும்.
  • மீன் குழம்பின் எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் போது அடுப்பை ஆஃப் செய்துவிட்டு மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.

வீடே மணக்கும் சுவையில் மத்தி மீன் குழம்பு ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP