காளானில் பல வகைகள் உள்ளன. நாம் பெரும்பாலும் பட்டன் காளான் கொண்டு காளான் வறுவல், காளான் கிரேவி, காளான் பிரியாணி செய்கிறோம். காளான் வகைகளில் சிப்பி காளான் மிக மிக ருசியானது. சிப்பி காளான் வைத்து குழம்பு தயாரித்தால் அசைவே உணவுகளே தோற்றிடும். பார்ப்பதற்கு பூச்செண்டு அல்லது காலிஃபிளவர் போல இருக்கும். இதை சமைக்கும் போது ஒரே ஒரு முக்கிய விஷயத்தை பின்பற்ற வேண்டும். சிப்பி காளானின் தண்டு மட்டும் பயன்படுத்தக் கூடாது. இதை வேக வைப்பது சிரமம். தண்டு பகுதியை சமைத்தாலும் ருசிக்காது. வாருங்கள் சிப்பி காளான் குழம்பு செய்முறையை பார்க்கலாம். ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் சிப்பி காளான் அதிகமாக வளர்க்கப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் செய்யப்படும் சிப்பி காளான் ரெசிபி இங்கே...
சிப்பி காளான் குழம்பு செய்ய தேவையானவை
- சிப்பி காளான்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- வர மிளகாய்
- மிளகு
- கடுகு
- கடலெண்ணெய்
- தண்ணீர்
- மல்லித் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- இஞ்சி
- பூண்டு
- கறிவேப்பிலை
- சீரகம்
- மஞ்சள் தூள்
மேலும் படிங்ககிட்ஸ் ஸ்பெஷல் டோரேமான் பேன்கேக் ரெசிபி; 30 நிமிடத்தில் செய்யலாம்
சிப்பி காளான் குழம்பு செய்முறை
- கடாயில் 75 மில்லி கடலெண்ணெய் ஊற்றி சூடான பிறகு 15 மிளகு போடவும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் சீரகம், பத்து பல் பூண்டு, 20 கிராம் இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து அரை கிலோ சின்ன வெங்காயம் போட்டு வதக்க தொடங்கவும்.
- மிதமான தீயில் சின்ன வெங்காயத்தை குறைந்தது 8 நிமிடங்களுக்கு வதக்கவும். சின்ன வெங்காயத்தின் நிறம் மாறுவதோடு கையில் தொட்டால் ஜெல்லி போல இருக்க வேண்டும்.
- சின்ன வெங்காயம் பாதி வதங்கும் போதே இரண்டு தக்காளியை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
- தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு 150 கிராம் தனியா தூள், 20 கிராம் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போடவும்.
- தொக்கு பதத்திற்கு வதக்கி சூடு குறைந்தவுடன் ஆட்டாங்கல்லில் போட்டு கெட்டியான பேஸ்ட் போல் அரைக்கவும்.
- அடுத்ததாக பூ பறிப்பது போல் சிப்பி காளான் பறித்து இதழை கிழிப்பது போல் சிப்பி காளானை கிழிக்கவும்.
- அதே கடாயில் மீண்டும் 25 மில்லி கடலெண்ணெய் ஊற்றி கடுகு ஸ்பூன் போடுங்கள்.
- கடுகு வெடித்தவுடன் 10 காய்ந்த மிளகாய், அரை கிலோ சிப்பி காளான் சேர்க்கவும். காளானை வேக வைக்க ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள்.
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிப்பி காளான் 60 விழுக்காடு வெந்த பிறகு அரைத்த மசாலா முழுவதையும் சேர்த்து இரண்டு ஸ்பூன் உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கெட்டியாக வேண்டுமென்றால் தண்ணீர் ஊற்றாதீர்கள். இதை இட்லி, சப்பாத்தி, தோசை, பரோட்டாவுடன் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் ஊற்றி சாப்பிட தண்ணீர் சேர்க்கலாம்.
- கொஞ்சம் கறிவேப்பிலை தூவி ஒரு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அடுப்பில் இருந்து சிப்பி காளான் குழம்பை இறக்கிவிடுங்கள். ருசி வேற லெவலில் இருக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation