herzindagi
image

பாகற்காய் குழம்பை எல்லோரும் விரும்பி சாப்பிட இப்படி செஞ்சு கொடுங்க

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் பாகற்காய் குழம்பு செய்ய நினைக்கிறீர்களா ? இந்த செய்முறையை பின்பற்றினால் அருமையான பாகற்காய் குழம்பு ரெடி பண்ணலாம்.
Editorial
Updated:- 2024-11-13, 18:29 IST

வீட்டில் பாகற்காய் சமையல் சென்று சொன்னால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடமாட்டோம் என அடம்பிடிப்பார்கள். எனினும் பாகற்காயின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்த பிறகு அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருக்க முடியது. பாகற்காய் கசப்பாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே சில பெரியவர்கள் கூட அதை விரும்புவதில்லை. 40 வயதில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் திடீரென பாகற்காக சாப்பிட தொடங்கிவிடுவார்கள். மாதத்தில் 3-4 முறையாவது பாகற்காய் குழம்பு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் பாகற்காயை கசப்பு தன்மை இன்றி குழம்பாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

பாகற்காய் குழம்பு செய்ய தேவையானவை

  • பாகற்காய்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • புளி
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • குழம்பு தூள்
  • கொத்தமல்லி
  • வெல்லம்

bittergourd gravy

பாகற்காய் குழம்பு செய்முறை

  • முதலில் பாகற்காயை நன்கு கழுவி வெட்டி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். பிஞ்சு பாகற்காயில் சின்ன விதைகள் இருக்கும். அவற்றை நீக்கும் அவசியமில்லை.
  • கால் கிலோ பாகற்காயை பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள். கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரை டீஸ்பூன் கடுகு போடுங்கள்.
  • கடுகு வெடித்தவுடன் கொஞ்சம் கறிவேப்பிலை, நறுக்கிய பாகற்காயை போட்டு வதக்கவும்.
  • பாகற்காய் குழம்பின் கசப்புத் தன்மையை குறைக்க பாகற்காயை வதக்குவது அவசியமாகும்.
  • இதையடுத்து தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் ஊற்றாமல் வதக்கவும்.
  • 7-8 நிமிடங்களில் பாகற்காய் நன்கு வதங்கிவிடும். பாகற்காயை தனியாக வைத்துவிட்டு அதே கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கால் டீஸ்பூன் வெந்தயம், பத்து பல் பூண்டு, 20 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • சின்ன வெங்காயம் கொஞ்சம் வதங்கிய பிறகு ஒரு பெரிய வெங்காயம் சேர்க்கவும்.
  • அடுத்ததாக இரண்டு தக்காளியை பொடிதாக நறுக்கியும், இரண்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்தும் ஊற்றுங்கள்.
  • இப்போது மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், குழம்பு தூள் இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு போடுங்கள். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாயை மூடிவிடுங்கள்.
  • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு இரண்டு எலுமிச்சை புளியை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கரைத்து புளி தண்ணீர் ஊற்றுங்கள்.
  • இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு வதக்கிய பாகற்காய் சேர்க்கவும். இறுதியாக அரை ஸ்பூன் வெல்லம் படவுர் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றினால் அருமையான பாகற்காய் குழம்பு ரெடி.

மேலும் படிங்க ருசியான கண்ணூர் கலத்தப்பம் ரெசிபி; குழந்தைகளுக்கு பிடிக்கும்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image credits : freepik, youtube

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]