herzindagi
left over chapati sweet ladoo recipe

Chapati Ladoo : சப்பாத்தி மீந்து விட்டதா? ஒரு முறை இந்த மாதிரி லட்டு செய்து பாருங்க!

சப்பாத்தி இருந்தால் போதும் வெறும் 15 நிமிடத்தில் இந்த சுவையான சப்பாத்தி லட்டுவை சுலபமாக செய்திடலாம்…
Editorial
Updated:- 2023-05-29, 09:45 IST

வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டால் அதை வீணாக்காமல் பல வகை உணவுகளாக மாற்றலாம். முட்டை சப்பாத்தி, சப்பாத்தி நூடுல்ஸ், கொத்து சப்பாத்தி போன்ற பல காரசாரமான ரெசிபிகளை நீங்களும் முயற்சி செய்து இருப்பீர்கள். ஆனால் சப்பாத்தியை வைத்து ஒரு இனிப்பான ரெசிபியை செய்ய வேண்டுமெனில் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சப்பாத்தி லட்டுவை தவறாமல் முயற்சித்து பாருங்கள்.

இரவு செய்த சப்பாத்தி மீந்து விட்டாலும் காலையில இது போன்ற சுவையான ரெசிபியாக மாற்றிவிடலாம். மீதம் உள்ள சப்பாத்திகளை ஈரம் படாமல் காற்று புகாத ஒரு பாக்ஸில் சேமித்து வைக்கவும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அனைவருக்கும் விருப்பமான இந்த சிற்றுண்டியை செய்து சுவைத்து மகிழுங்கள். சப்பாத்தி லட்டு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி வீட்டிலேயே செய்யலாம் கலக்கலான சில்லி கார்லிக் பரோட்டா

தேவையான பொருட்கள்

left over chapati recipe

  • நெய் - 2 டீஸ்பூன்
  • பால் - 2 டேபிள் ஸ்பூன்
  • பால் பவுடர் - சிறிதளவு (விரும்பினால்)
  • நாட்டு சர்க்கரை/ பொடித்த வெல்லம் - ¼ கப்
  • சப்பாத்தி 4-5
  • ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை

let over roti ladoo

  • முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் சிறிதாக நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி அதனுடன் பொடித்த சப்பாத்தியை சேர்த்து வதக்கவும்.
  • இதன் மீது பால் தெளித்து லேசாக ஈரப்பதமாக்கிக் கொள்ளவும்.
  • அடுத்ததாக பால் பவுடர், நாட்டுசர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் நெய்யில் வறுத்த முந்திரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கை பொறுக்கும் சூட்டில் சிறிய லாடுக்களாக பிடித்து வைக்கவும்.

கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை போன்ற ஆரோக்கியமான விஷயங்களை சேர்த்து குழந்தைகளுக்கு இது போன்ற சிற்றுண்டியை செய்து அசத்துங்கள்…

இந்த பதிவும் உதவலாம்: எவ்வளவு செய்தாலும் பத்தாது, சுட சுடவே தீர்ந்து விடும் ஹெல்த்தியான கீரை பக்கோடா ரெசிபி!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]