herzindagi
image

தித்திக்கும் கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி செய்முறை

கேரளவாசிகள் விரும்பி சாப்பிடும் பலாப்பழ எரிசேரி செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கேரள விருந்து நிகழ்வுகளில் பலாப்பழ எரிசேரி கட்டாயம் இடம்பெறும்.
Editorial
Updated:- 2024-11-26, 10:16 IST

பலாப்பழ எரிசேரி அல்லது சக்க எரிசேரி என்பது கேரளாவில் பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் மதிய விருந்து சைட் டிஷ் ஆகும். ஓணம் சத்யா உள்ளிட்ட பல முக்கியமான நிகழ்வுகளில் இந்த பலாப்பழ எரிசேரி சமைத்து ருசிக்கப்படுகிறது. தித்திப்பான பலாப்பழத்தில் சைட் டிஷ் செய்தால் எவ்வளவு அருமையான இருக்குமென நினைத்து பாருங்கள். கேராவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக பலாப்பழ எரிசேரி விளங்குகிறது. குறைந்த பொருட்களை கொண்டு விரைவாக பலாப்பழ எரிசேரியை தயாரித்துவிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொட்ர்ந்து இணைந்திருங்கள்.

பலாப்பழ எரிசேரி செய்ய தேவையானவை

  • பலாப்பழம்
  • தேங்காய்
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • தண்ணீர்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • கறிவேப்பிலை

jackfruit

பலாப்பழ எரிசேரி செய்முறை

  • பலாப்பழ எரிசேரி செய்வதற்கு 350-400 கிராம் பலாப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். பிஞ்சான பலாப்பழம் பயன்படுத்த வேண்டாம்.
  • பலாப்பழத்தை காய்கறி வெட்டுவது போல் வெட்டவும். பலாப்பழ கொட்டைகளை எடுத்து வெயிலில் காய வையுங்கள். சாம்பாரில் பயன்படுத்தலாம். 
  • இந்த பலாப்பழத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 8-10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
  • இதனிடையே மசாலா தயாரிக்கலாம். 4 பச்சை மிளகாய், அரை மூடி துருவிய தேங்காய் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை, 5 பல் பூண்டு போட்டு அம்மிக்கல்-ல் அரைக்கவும்.
  • மிக்ஸியில் பயன்படுத்தாமல் மசாலா தயாரிக்க முயற்சிக்கவும்.
  • பலாப்பழம் வெந்துவிட்டதா என பார்த்து அதனுடன் இந்த அரைத்து வைத்திருக்கும் மசாலாவை முழுமையாக சேருங்கள்.
  • 100 எம்.எல் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு மீண்டும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • தாளிப்பதற்கு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு போடுங்கள்.
  • கடுகு வெடித்தவுடம் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். இதோடு 4 காய்ந்த மிளகாய் போடுங்கள்.
  • இறுதியாக அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கால் மூடி தேங்காய் துருவல் சேர்க்கவும். சூட்டிலேயே தேங்காய் வறுபட்டுவிடும்.
  • இதை பலாப்பழத்துடன் கலந்துவிட்டால் சுவையான பலாப்பழ எரிசேரி ரெடி.
  • பல விதமான எரிசேரி உள்ளன. சிலர் பலாப்பழ கொட்டையை பயன்படுத்தி எரிசேரி செய்கின்றனர். வெள்ளை காராமணியை வேகவைத்து எரிசேரியில் சேர்க்கின்றனர். நீங்களும் காராமணி சேர்க்க நினைத்தால் மசாலா போடும் முன்பாக சேர்க்கவும்.

மேலும் படிங்க சுடக்கு போடும் நேரத்தில் சுவையான பூண்டு சாதம் செய்முறை; குழந்தைகளுக்கு பிடிக்கும்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]