மதிய வேளையில் குழந்தைகளுக்கும் கணவருக்கும் புதிய வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்க ஆசையா ? மிக மிக எளிதான மற்றும் ருசியான பூண்டு சாதம் செய்து கொடுங்கள். இந்த வெரைட்டி ரைஸ் செய்வதற்கு அரைமணி நேரம் கூட ஆகாது. வீட்டில் இரவில் மீந்து போன சாதம் இருந்தால் அதை வைத்து சுவையான பூண்டு சாதம் தயாரித்துவிடலாம். நல்லெண்ணெய்யை பயன்படுத்தி மட்டுமே இதை சமைக்க போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம்.
![garlic rice]()
பூண்டு சாதம் செய்ய தேவையானவை
- சாதம்
- பூண்டு
- வெங்காயம்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- வேர்க்கடலை
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- பெருங்காயம்
- சீரகம்
மேலும் படிங்க ஆந்திரா ஸ்பெஷல் சுரக்காய் தயிர் பச்சடி செய்முறை
பூண்டு சாதம் செய்முறை
- ஒரு பேன் எடுத்து எண்ணெய் ஊற்றாமல் சூடுபடுத்தி 50 கிராம் பச்சை வேர்க்கடலை, ஆறு காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
- இவற்றுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேருங்கள். இதை தனியாக வைக்கவும் சூடு குறைந்தவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.
- அதே பேனில் 8 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் 30 பல் பூண்டை இடித்து நன்கு நசுக்கி போட்டு வறுக்கவும். பூண்டு சிவப்பு நிறத்திற்கு மாற வேண்டும்.
- நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மட்டுமே பூண்டு சாதத்தின் முழு ருசியை உணர முடியும். பூண்டை மொறுமொறுப்பாக வறுத்திடுங்கள்.
- பூண்டு வறுபட்ட பிறகு ஏற்கெனவே வறுட்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- இதையடுத்து கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு போடுங்கள்.
- கடுகு வெடித்தவுடன் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போடுங்கள்.
- மஞ்சள் தூளின் பச்சை வாசனை போன பிறகு மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை முழுமையாக சேருங்கள்.
- தீயை குறைத்து இரண்டு நிமிடங்களுக்கு கலந்துவிட்டு 750 கிராம் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.
- புளியோதரை, லெமன் சாதம் கிளறுவது போல் ஒரு நிமிடத்திற்கு கரண்டியை வைத்து கலந்துவிடுங்கள். சூப்பரான லஞ்ச் பாஸ்க் ரெசிபி பூண்டு சாதம் ரெடி.
- சிப்ஸ், ஊறுகாயுடன் தொட்டு சாப்பிடுங்கள். மிகவும் சுவையாக தெரியும்.
- மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் ஒரு வாரத்திற்கு கெடாது. பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.