herzindagi
Banana halwa  south india

Banana Halwa: தென்னிந்திய வாழைப்பழ அல்வா எளிதில் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வாழைப்பழ அல்வா வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.  
Editorial
Updated:- 2024-02-27, 12:30 IST

இனிப்பு உணவுகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் அல்வா என்றால் இனிப்பு உணவு வகைகளில் எல்லையில்லா ஆனந்தத்தை கொடுக்கும் ஒரு முக்கிய ரெசிபி ஆகும்.

அல்வா என்பது இந்தியாவில் பொதுவான இனிப்பு உணவாகும். பல வகையான அல்வா ரெசிபிகள் இடங்களுக்கு ஏற்றார் போல் சந்தைகளிலும் வணிக வளாகங்களிலும் கிடைக்கும். ஆனால், வெளியில் ஆசைப்பட்டு வாங்கும் அல்வா உணவுகளை வீட்டில் செய்யும் போது நூற்றில் 50 சதவீதம் பேருக்கு அல்வா செய்முறை தோல்வியில் போய் முடியும். ஏனென்றால், அல்வா செய்முறைக்கு பல்வேறு பக்குவ முறைகள் இருக்கிறது. அதை சரியான முறையில் செய்தால் சுவையான ஆரோக்கியமான அல்வா உணவுகளை எளிதில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம்.

அல்வாவில் பல வகைகள் இருந்தாலும் வாழைப்பழ அல்வா வீட்டில் செய்வதற்கு எளிதான ஒன்றாக அமையும். ஏனென்றால் இதில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் சுவையான ஆரோக்கியமான அல்வாவை நம்மால் தயாரிக்க முடியும். ஆரோக்கியமான சுவை நிறைந்த வாழைப்பழ அல்வா செய்முறை குறித்து இப்பதிவில் விரிவாக நாம் பார்க்கலாம்.

தென்னிந்திய வாழைப்பழ அல்வா 

Banana Halwa home

தேவையான பொருட்கள்

  • 3 கப் வாழைப்பழ கூழ்
  • 1/2 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள்
  • 4-6 டீஸ்பூன் டால்டா
  • 3 டீஸ்பூன் நெய்
  • 1 கப் துருவிய வெல்லம்
  • 3/4 கப் அரைத்த பனை வெல்லம்
  • 5-6 முந்திரி பருப்பு - பாதியாக வறுத்து

செய்முறை

  1. நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான வெப்பத்தில் டால்டாவை போட்டு கிளறவும். பழுப்பு நிறமாக மாறும் வரை கிளறிவிட்டு, ஐந்திலிருந்து ஆறு வாழைப்பழத்தை தோல் உரித்து கையில் நன்றாக பிசைந்து நான் ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.
  2. பச்சை ஏலக்காய் தோலை சேர்த்து நன்றாக கலந்து 
  3. அதிகமான வெப்பத்தில் பாத்திரத்தில் அடியில் சேர்த்து கலக்கவும்
  4. எடுத்து வைத்த வெல்லம், பனைவெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை மற்றொரு பாத்திரத்தில் தயார் செய்து மென்மையான கலவை கிடைக்கும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.
  5. சமைத்த சூடான இனிப்பு சர்க்கரை கலவையை வாழைப்பழ கலவையோடு சேர்த்து இரண்டும் ஒன்று சேர்ந்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
  6. முந்திரிகளை வறுத்து சமைத்த கலவையில் மேல் தூவவும்
  7. தயாரான வாழைப்பழ அல்வா மேல் மீண்டும் வறுத்த முந்திரி மற்றும் டால்டா நெய் ஆகியவற்றை சிறிது சேர்க்கவும்..
  8. மிதமான வெப்பத்தில் பரிமாறவும்

குறிப்பு :- வாழைப்பழ அல்வா செய்யும்போது தேர்ந்தெடுக்கும் வாழைப்பழங்கள் பழுத்த பழமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பச்சை வாழைப்பழம் அல்லது உங்கள் பகுதியைச் சார்ந்த இனிப்பு மிகுந்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுப்பது கூடுதல் சுவை தரும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]