ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், மோமோஸ், சிக்கன், பிரெட் ஆகியவற்றுடன் சேர்த்து மயோனைஸை நாம் உட்கொள்கிறோம். சமீபத்தில் தெலுங்கானாவில் முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸிற்கு ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மோமோஸுடன் மயோனைஸ் தொட்டு சாப்பிட்ட பலருக்கும் உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயோனைஸில் உயிரிழக்க செய்யும் அளவிற்கு என்ன தீங்கு உள்ளதென கண்டறிந்து முட்டை பயன்படுத்தி தயாரிக்கும் மயோனைஸிற்கு ஒரு வருட தடை விதித்துள்ளனர். மயோனைஸ் மட்டுமல்ல ஷவர்மாவுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டு தடை விதிக்கப்பட்டது.
க்ரீமியாகவும், கொஞ்சம் கெட்டியாகவும் உள்ள மயோனைஸ் தயாரிக்க முட்டை, ரீஃபைண்டு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. முட்டை பச்சையாக பயன்படுத்துவதால் இதில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உற்பத்தியாகிறது. இதையடுத்து மயோனைஸை முறையாக பதப்படுத்த தவறினால் சாப்பிடும் போது வயிற்று பிரச்னை ஏற்படும். சிறிது நாட்களில் அந்த பாக்டீரியா வேகமாக பரவி வயிற்று போக்கு, வாந்தி, ஃபுட் பாய்சனிங் ஏற்படுத்தும். இதன் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் மயோனைஸ் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிங்க அட்டகாசமான மங்களூரு கோலி பஜ்ஜி ரெசிபி; 30 நிமிடங்களில் செய்யலாம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]