herzindagi
Main gk

Kongura Pulusu : கோங்குரா புளுசு! இட்லி, தோசைக்கான அசத்தல் காம்போ

வாசகர்களுக்கான ஆந்திரா ஸ்பெஷல் ரெசியில் நாம் அடுத்து பார்க்கப் போவது கோங்குரா புளுசு. 15-20 நிமிடங்களில் இதைச் செய்து விடலாம். 
Editorial
Updated:- 2024-02-24, 09:51 IST

ஆந்திரா ஸ்பெஷல் கட்டுரைகளில் அந்நியன் தக்காளி சட்னி, கோவக்காய் சட்னிக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான கோங்குரா புளுசு எப்படி செய்வது எனப் பகிர்ந்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிதே. மேலும் ஆந்திர மாநிலம் குண்டூர் நகருக்கு சென்றால் இந்த கோங்குரா புளுசுவை தவறாமல் ருசித்து விடுங்கள்.

 gk

கோங்குரா புளுசு செய்யத் தேவையானவை

  1. இரண்டு கட்டு கோங்குரா இலைகள்
  2. கடலெண்ணெய்
  3. பச்சை மிளகாய் 
  4. வெங்காயம்
  5. தக்காளி 
  6. புளி 
  7. தண்ணீர் 
  8. உப்பு 
  9. வெல்லம்
  10. பூண்டு
  11. கடுகு 
  12. வெங்காயம் 
  13. கறிவேப்பிலை 
  14. மஞ்சள் தூள் 
  15. மிளகாய் தூள் 
  16. பெருங்காயம்

மேலும் படிங்க காரசாரமான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி

கோங்குரா புளுசு செய்முறை 

  • முதலாவதாக ஒரு கடாயில் ஆறு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடாகும் வரை காத்திருக்கவும்
  • கடலெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துங்கள்
  • கடலெண்ணெய் சூடான பிறகு பத்து பச்சை மிளகாய்களை பொடிதாக நுறுக்கி கடாயில் போடவும் 
  • 20-30 விநாடிகளுக்கு கடலெண்ணெயில் பச்சை மிளகாய்களை நன்கு வறுக்கவும் 
  • இதனுடன் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடிதாக வெட்டி சேர்க்கவும். மறக்காதீர்கள் வெங்காயத்தை வறுத்துவிடக் கூடாது.
  • அடுத்ததாகச் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள இரண்டு கட்டு கோங்குரா இலைகளை கடாயில் போடவும்  
  • இரண்டு பெரிய சைஸ் தக்காளியை வெட்டிக் கடாயில் போட்டு வதக்கிக் கொண்டே இருங்கள்
  • தற்போது தீயின் வேகத்தைக் குறைத்து கடாயை மூடி, இதனை 8-10 நிமிடங்களுக்குச் சமைக்கவும்
  • தக்காளியின் பச்சை வாடை போனபிறகு மேஷரை கொண்டு அனைத்தையும் நன்றாக மசித்து விட வேண்டும்
  • அடுத்ததாக 50 கிராம் புளியை 100 மிலி தண்ணீரில் கரைத்து, அதிலிருந்து 80 மிலி புளி தண்ணீரை கடாயில் சேர்க்கவும் 
  • இரண்டு நிமிடங்களுக்கு நன்றாகக் கிண்டி விடுங்கள்
  • கோங்குரா புளுசுக்கு தேவையான அளவு உப்பு, 20 கிராம் வெல்லம் சேர்த்து மிக்ஸ் செய்தபிறகு அடுப்பை ஆஃப் செய்துவிடவும் 
  • மற்றொரு பேனில் 75 மிலி கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒன்றரை ஸ்பூன் கடுகு போடவும்
  • கடுகு பொறிந்தவுடன் 100 கிராம் பூண்டு சேர்க்கவும்
  • பூண்டு தங்க பழுப்பு நிறத்தில் தென்பட்டவுடன் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி பேனில் போடவும்
  • தேவையான அளவிற்கு கறிவேப்பிலை சேர்த்து 40 விநாடிகளுக்குப் பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்
  • இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து பேன் இருக்கும் சூட்டிலேயே அனைத்தையும் நன்றாகக் கிண்டுங்கள்
  • இதை அப்படியே கோங்குரா இலைகள் வதக்கிய பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் செய்யவும்
  • சூடு ஆறிய பிறகு பாத்திரத்தை மூடி விட்டு தனியாக வைக்கவும்
  • இதைத் தயாரித்த உடனேயே சாப்பிடக் கூடாது மறுநாள் தான் சாப்பிட வேண்டும்

மேலும் படிங்க அருமையான கோவக்காய் சட்னி ரெசிபி

சாதத்தில் பிரட்டி சாப்பிடவும், இட்லி மற்றும் கல் தோசையுடன் தொட்டு சாப்பிடவும் இந்த கோங்குரா புளுசு அற்புதமான காம்போவாகும்

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]