herzindagi
paniyaram recipe with pori easy

Pori Paniyaram : வீட்டில் பொரி இருக்கா? 10 நிமிஷத்துல காலை டிபன் செய்திடலாம்.

காலை உணவுக்கு என்ன செய்வதென்று குழப்பமா? இட்லி தோசை மாவு இல்லாத போது இந்த மாதிரி காலை உணவு செய்து அசத்துங்க…
Editorial
Updated:- 2023-05-18, 09:40 IST

பணியாரத்தில் பல வகை உண்டு. இனிப்பு பணியாரம், கார பணியாரம், நெய் அப்பம், கோதுமை பணியாரம் என பல வகையான பணியாரங்களை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள், பெரும்பாலானவற்றை நீங்கள் சாப்பிட்டும் இருப்பீர்கள். ஆனால் பொரியில் பணியாரம் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொரி ஆரோக்கியமான சிற்றுண்டி. வீட்டில் பொரி இருந்தால் ஒரு முறை இந்த பணியாரத்தை செய்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக இட்லி தோசை மாவு இல்லாமல், என்ன டிபன் செய்வது என்று புரியாமல் குழம்பி தவிக்கும் பொழுது இந்த ரெசிபி கைகோடுக்கும். இந்த ஆரோக்கியமான பணியாரம் ரெசிபியை நீங்களும் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய இப்படி சூப் செய்து குடிங்க!

தேவையான பொருட்கள்

pori recipes

  • பொரி - 1 கப்
  • ரவை - ½ கப்
  • வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - 4
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பச்சை மிளகாய் - 1
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - ½ டீஸ்பூன்
  • கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

south indian breakfast paniyaram

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை நல்ல பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பொரியை 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்பு வடிகட்டிக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸர் ஜாரில் ரவை சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த பொரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  • இதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு, கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். இதை பணியாரம் மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பணியார கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். தயாராக வைத்துள்ள மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.
  • இதை தேங்காய் சட்னி சாம்பார் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இதை விட ஹெல்த்தியான ஒரு பரோட்டாவை செய்யவே முடியாது!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]