herzindagi
gujarathi style chapathi

Fenugreek Chapati Recipe : குஜராத்தி ஸ்டைல் வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை

காலை வேளையை ஆரோக்கியமாக தொடங்கிட விருப்பமென்றால் குஜராத்தி ஸ்டைல் வெந்தயக் கீரை சப்பாத்தி சாப்பிடுங்கள்
Editorial
Updated:- 2024-01-18, 14:38 IST

வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் அன்றாடம் சப்பாத்தி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கோதுமை சப்பாத்தியை மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்றால் அது உண்மையல்ல. சப்பாத்திகளில் பல வகைகள் உண்டு. 

சோயா மாவு சப்பாத்தி, மசாலா சப்பாத்தி, வாழைப்பழ சப்பாத்தி, கிரீன் மசாலா சப்பாத்தி, பீட் ரூட் சப்பாத்தி, கடலை மாவு சப்பாத்தி என 20க்கும் மேற்பட்ட வகையான சப்பாத்திகள் உள்ளன. அதில் நாம் மேதி தெப்லா எனும் குஜராத்தி ஸ்டைல் வெந்தயக் கீரை சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்க போகிறோம். சப்பாத்தியில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் குறைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.

பொதுவாக குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது சற்று கடினம். அதனால் மேதி தெப்லா மூலம் கீரையை மறைமுகமாக உணவில் சேர்த்து கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.

வெந்தயக் கீரை சப்பாத்திக்கு தேவையானவை

  • வெந்தயக் கீரை - அரை கட்டு 
  • 250 கிராம் கோதுமை மாவு
  • 50 கிராம் கடலை மாவு 
  • ஓமம்
  • பெருங்காயத் தூள்
  • மிளகாய் தூள்
  • இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு 
  • பச்சை மிளகாய் 
  • தயிர் 
  • தண்ணீர் 

மேலும் படிங்க Chilli Bread Recipe : சுவையான மொறுமொறுப்பான சில்லி பிரட் செய்முறை

கவனம் கொள்க

  • இந்த செய்முறையில் 250 கிராம் கோதுமை மாவு மற்றும் 50 கிராம் கடலை மாவு பயன்படுத்துகிறோம். நீங்கள் விரும்பினால் முழுவதும் கோதுமை மாவு மட்டும் பயன்படுத்தலாம்.
  • அதே போல சப்பாத்திக்கு பயன்படுத்தும் இரண்டு மிளகாய்களையும் முடிந்த அளவு பொடிதாக நறுக்கி வைத்தி விடுங்கள். மிளகாயில் இருக்கும் விதைகளை வெளியேற்றி விட்டு வெறும் தோலை மட்டும் பயன்படுத்தவும்.
  • வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை
  • பெரிய பாத்திரத்தில் 250 கிராம் கோதுமை மாவு போட்டு அதனுடன் 50 கிராம் கடலை மாவு சேர்க்கவும்
  • இதன் பிறகு கால் ஸ்பூன் ஓமம், அரை ஸ்பூன் பெருங்காயத் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  • அடுத்ததாக சப்பாத்திக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்
  • தொடர்ந்து பொடியக நறுக்கிய பச்சை மிளகாய்களை போடுங்கள். பச்சை மிளகாய் இந்த உணவுக்கு போதுமான காரத்தை தரும்.
  • இதனிடையே அரை கட்டு வெந்தயக் கீரையை தண்ணீரில் கழுவி ஆய்ந்த பிறகு கொத்தமல்லி கட்டை நறுக்குவது வெந்தயக் கீரையை பொடிதாக நறுக்கி விடுங்கள் 
  • ஒரு கடாயில் ஒன்றரை ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பொடிதாக நறுக்கிய வெந்தயக் கீரையை போடவும்
  • பச்சை வாடை போன பிறகு வெந்தயக் கீரையின் சுவை வெளிப்படத் துவங்கும்
  • அடுப்பை ஆஃப் செய்து வெந்தயக் கீரை சூடாக இருக்கும் போதே கோதுமை மாவு, கடலை மாவு இருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்
  • அடுத்ததாக 12 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து அனைத்தையும் நன்றாக மிஸ்க் செய்து வெந்தயக் கீரை சப்பாத்திக்கான மாவை தயாரியுங்கள் 
  • நீங்கள் தயிர் சேர்ப்பதால் மாவு மிகவும் மிருதுவாக இருக்கும்.
  • சப்பாத்தி மாவை எப்படி உருட்டுவீர்களோ அதேபோல தான் இந்த மாவை உருட்ட வேண்டும்.
  • தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்க்க வேண்டும். அதுவும் சிறு சிறு துளிகள்…
  • மாவை உருட்டிய பிறகு 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்
  • இதன் பிறகு மாவை எடுத்து பூரி, சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டிக் கொள்ளுங்கள்
  • அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில் கால் ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு வெந்தயக் கீரை சப்பாத்தியை சுட்டெடுக்கவும்.  எண்ணெய் பயன்படுத்துவதை விட சப்பாத்திக்கு நெய் பயன்படுத்துவது சிறந்தது.
  • ருசியான சுவையான ஆரோக்கியமான வெந்தயக் கீரை சப்பாத்தி தயார். இதை ஊறுகாய் அல்லது தயிர் பச்சடியுடன் தொட்டு சாப்பிடலாம்.

மேலும் படிங்க Paneer Pakoda : ஸ்பெஷல் தின்பண்டம் - மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா

இந்த மாவை நீங்கள் ஒருவாரத்திற்கு பயன்படுத்தினால் கூட கெட்டு போகாது. வெள்ளைத் துணியைக் கொஞ்சம் ஈரப்படுத்தி மாவை மூடிவிடுங்கள். தொலை தூர பயணங்களுக்கு இது மிக உதவிகரமாக இருக்கும். தேவையான நேரங்களில் மாவை எடுத்து சுட்டு சாப்பிடலாம். 

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]